Home /namakkal /

நாமக்கலில் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க மானியம் அறிவிப்பு

நாமக்கலில் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க மானியம் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு டிரோன் மூலம் பூச்சி மருந்துகள் தெளிக்க மானியம் வழங்கப்படுவதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Paramathi, India
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு டிரோன் மூலம் பூச்சி மருந்துகள் தெளிக்க மானியம் வழங்கப்படுவதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நவீன காலத்திற்கு ஏற்றார் போல், விவசாயம் மாறி வருகின்றது. மேலும், விவசாய பணிகளுக்கு ஆட்கள் குறைவாக கிடைத்து வருகின்றனர். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு வகையான யுக்திகளை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் டிரோன் மூலம் உரம் மற்றும் மருந்து தெளித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

விவசாயிகள் நவீன வேளாண்மை சாகுபடிக்கு உரம், மருந்து, பூச்சிக்கொல்லிகளுக்கும், களை எடுக்கவும் டிரோன்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்நிலையில் நவீன கால வேளண்மையிலும் டிரோன் முக்கிய அங்கம் பிடித்துள்ளது.

விவசாயத்தில் டிரோன்கள் முக்கிய இடத்தையும் பிடிக்கும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. வரும் காலத்தில் ஆட்கள் பற்றாக்குறையை போக்க டிரோன் தான் முக்கிய காரணியாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும், டிரோன்களை இயக்க பல்வேறு பயிற்சியும் வோளண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் அளிக்கப்படுகிறது. சில சமயங்களில் டிரோன்கள் வேளாண்மை பயன்பாட்டிற்காக வாங்கும் போது, மானியமும் அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வேளாண்மை அலுவலர்கள் டிரோன் மூலம் மருந்து மற்றும் உரம் தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பருத்தி காய் காய்த்து அறுவைடைக்கு தயாராகும் நிலையில் மாவு பூச்சி, இலைபேன் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஆள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பூச்சி மருந்து தெளிக்க செலவு அதிகமாகிறது. டிரோன் மூலம் பருத்தி பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 அல்லது 50 சதவீதம் மானியம் இதில் எது குறைவோ அது வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் நீடித்த நிலையான பருத்தி இயக்கத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் தேவையற்ற கூடுதல் செலவுகள், நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக பூச்சி மருந்து செலவும் குறைவாகிறது. எனவே பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Namakkal

அடுத்த செய்தி