ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - முன்னேற்பாடுகளை செஞ்சிக்கோங்க...

நாமக்கல் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - முன்னேற்பாடுகளை செஞ்சிக்கோங்க...

மின் தடை

மின் தடை

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரத்தை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மெட்டாலா, குரங்காத்துப் பள்ளம், கோரையாறு, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர்பந்தல் காடு, நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, பழனியப்பனூர், பச்சுடையாம்பாளையம், தொ.ஜேடர்பாளையம், வெள்ளகல்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல், குமாரபாளையம் துணை மின் நிலையத்திலும் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், காட்டுவலசு, கோட்டைமேடு, வேமன் சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன் பாளையம்,  சடையம்பாளையம், ஓலப்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு, வளையக்காரனூர், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Must Read : த்ரில் அனுபவம்... சில்லென்று கொட்டும் அருவி - குளித்து மகிழ கோவை குற்றாலம் வாங்க!

அத்துடன், பள்ளிபாளையம் எஸ்.பி.பி காலனி அருகிலுள்ள துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளிபாளையம், வெடியரசன் பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணா நகர், கடச்சநல்லூர், தாஜ்நகர், காவேரி ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown