முகப்பு /நாமக்கல் /

திருச்செங்கோட்டில் போர்வெல் அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்..

திருச்செங்கோட்டில் போர்வெல் அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்..

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal News : திருச்செங்கோட்டில் போர்வெல் அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆழ்துளை கிணறு அமைக்கும் போர்வெல் லாரிகளான ரிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு முகாம் திருச்செங்கோடு குமாரபாளையம் சாலையில் உள்ள தேவனாங்குறிச்சி தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த ரிக் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு முகாமில் தற்போது ரிக் தொழிலில் உள்ள பிரச்சனைகளை அணுகுவதற்கும், ரிக் தொழிலுக்கும், ரிக் உரிமையாளர்களுக்கும் வரும் பிரச்னைகளை அனைவரும் அறியும் வண்ணம் நடத்தப்படும் கலந்தாய்வு முகாமாக நடத்தப்பட்டது. இதில் தலைவர் கே.லட்சுமணன் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.சத்தியமூர்த்தி, பொருளாளர் கே.ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

மேலும் வண்டியில் விபத்து ஏற்படும் பட்சத்தில் அதை எப்படி அணுகுவது என்பது குறித்தும், உயிரிழப்பு ஏற்பட்டால் முதலில் சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஆலோசனை, ஏஜெண்டுகள் மற்றும் தொழிலாளர்கள் செய்யும் பண மோசடியை எவ்வாறு தவிர்ப்பது, வண்டி மற்றும் வண்டி தொழிலாளர்களின் இன்சூரன்ஸ் எவ்வாறு போட வேண்டும் மற்றும் இன்சூரன்ஸ் சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்கள், ரிக் உரிமையாளர்கள் மேல் போடப்படும் போலி வழக்குகளை எவ்வாறு அணுகுவது என்பது பற்றிய ஆலோசனை குறித்தும் கலந்தாய்வு செய்து முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இந்த முகாமில் ரிக் உரிமையாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Namakkal