ஹோம் /நாமக்கல் /

Namakkal | வளையல் அலங்காரத்தில் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்த அம்மன்

Namakkal | வளையல் அலங்காரத்தில் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்த அம்மன்

அலங்காரத்துடன் அம்மன்

அலங்காரத்துடன் அம்மன்

நாமக்கலில் வளையல் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோயில்களில் காலை முதலே பக்தர்கள் திரண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து கோயில் முழுவதும் அலங்கரித்தும் வழிப்பட்டனர்.

  ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக வெள்ளிக்கிழமை நாட்களில்

  கோயில்களை அலங்கரிப்பதன் மூலம் மனதுக்கும், நல்ல எண்ணங்களுடன், உடல் நலத்துடன் இருக்கனும் என்று ஆலயங்களை வித்தியாசமாக அலங்கரித்தும் வழிபடுவார்கள். இதன் மூலம் மனது அமைதி கொண்டு இறைபக்தியில் மூழ்கும் என்று கருதப்படுகிறது.

  அந்த வகையில்ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து பக்தர்கள் வழிபாடுகள் நடத்தினர்.

  குறிப்பாக பத்திரகாளி அம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், சின்ன ஓங்காளிம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக கோயில் முழுவதும் வேப்பிலை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

  அதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு பல வண்ணங்கள் கொண்டு வளையல்கள் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அம்மன் மயில் மேல் உட்கார்ந்து இருப்பது போல் அமைக்கப்பட்டு இருந்தது. அம்மன் வளையல் அலங்காரத்துடன் மயில் மீது அமர்ந்து இருப்பதைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தார்கள்.

  மேலும் பத்ரகாளி அம்மன், சின்ன ஓங்காளிம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோயில்களில் காலை முதலே மக்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற வந்ததால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

  செய்தியாளர்: மதன் - நாமக்கல்

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal