Home /namakkal /

Namakkal | கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Namakkal | கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொல்லிமலை ஆகாய கங்கை அருவி

கொல்லிமலை ஆகாய கங்கை அருவி

Namakkal Kolli Hills waterfalls | நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவியில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் கனமழை பெய்து வந்தது. இதனால், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு,ஆகாய கங்கை அருவியில் குளிக்கவும், சுற்றிப்பார்க்கவும் வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும், அங்கிருந்து தண்ணீர் செல்லும் புளியஞ்சோலை பகுதியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அங்கும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால், கொல்லிமலை செல்லும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள நம்ம அருவி, மாசிலா அருவி ஆகியவற்றில் குளித்து வந்தனர். தற்போது கொல்லிமலை பகுதிகளில் கனமழை மழை இல்லாததால், காட்டாறுகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்ஆகாய கங்கை அருவியில் குளிக்க, வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் உள்ள நுழைவாயில் கதவு திறக்கப்பட்டது. இதனால், கொல்லிமலைக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள், ஆகாய கங்கை அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

இதையும் வாசிக்க: சித்தர் குகைகள் முதல் படகு இல்லம் வரை.. கொல்லிமலையில் வியக்க வைக்கும் சுற்றுலாத்தலங்கள்

இதேபோல், புளியஞ்சோலை அருவிகளிலும் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Hill Stations, Namakkal, Tourism

அடுத்த செய்தி