ஹோம் /Namakkal /

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் - காணொளி வாயிலாக தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் - காணொளி வாயிலாக தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..

Namakkal

Namakkal

Namakkal District: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட தொடக்க விழா வேளாண்மை -உழவர் நலன்துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி மூலம் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் தொடக்க விழா நடைபெற்றது.

  இதில் தேவனாங்குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஊராட்சி மன்ற தலைவர், வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, என பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

  மேலும் விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும், ஒவ்வொரு துறையின்‌ செயல்பாடுகள் மற்றும் அதில் வழங்கப்படும் மானியங்கள், சலுகைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

  இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் விழாவில் விவசாயிகளுக்கு பேட்டரி பிரேயர், கைத்தெளிப்பான், உளுந்துவிதை, ஷீயுமிக் ஆசிட், கே. பாக்டீரியா, பிளாஸ்டிக் டிரம், நெகிழி கூடை, காய்கறி விதைகள், மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  செய்தியாளர்: மதன் - நாமக்கல்

  Published by:Arun
  First published:

  Tags: Namakkal