ஹோம் /நாமக்கல் /

எண்ணெய், அரிசி சோறு சாப்பிடாத கிராம மக்கள் : நாமக்கல் அருகே அழியா இலங்கை அம்மன் கோவில் திருவிழா!

எண்ணெய், அரிசி சோறு சாப்பிடாத கிராம மக்கள் : நாமக்கல் அருகே அழியா இலங்கை அம்மன் கோவில் திருவிழா!

அழியா இலங்கை அம்மன் கோவில்

அழியா இலங்கை அம்மன் கோவில்

Aliya Ilangai Amman Koil | நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வேலம்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான அழியா இலங்கை அம்மன் கோவிலில், ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறும். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வேலம்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) திருவிழா நடக்கிறது. இதில், வேண்டுதலை நிறைவேற்ற அதிகாலையில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர், ஆடுகளை பலியிட்டு விருந்து அளிப்பர்.

இந்த விழாவை யொட்டி 3 நாட்கள் கூனவேலம்பட்டி, கூனவேலம்பட்டி புதூர், பாலப்பாளையம், தோனமேடு, ஆனைகட்டி பாளையம், குறுக்கபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் பொங்கல் வைப்பவர்கள் குடும்பத்திலும், வெளியூர்களில் இருந்து பொங்கல் வைக்க வருபவர்களின் குடும்பத்திலும், சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்த மாட்டார்கள்.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

வீட்டில் அரிசி சோறு சாப்பிட மாட்டார்கள். கேழ்வரகு, கம்பு, சோளம், திணை போன்றவற்றால் சமைக்கப்பட்ட உணவு வகைகளை தான் சாப்பிடுவர். மேலும் பொங்கல் வைக்கும் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி கொள்வர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கட்டிலில் படுத்து உறங்க மாட்டார்கள். திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கிராம மக்கள் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்த்து கம்பு, கேழ்வரகு போன்ற உணவு வகைகளை சாப்பிட தொடங்கி உள்ளனர். (இதற்கான காரணங்கள் குறித்து நாளை, அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம்)

Published by:Suresh V
First published:

Tags: Festival, Local News, Namakkal, Temple