ஹோம் /நாமக்கல் /

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு... நாமக்கல்லில் சூடுபிடிக்கும் பொங்கல் விற்பனை.. 

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு... நாமக்கல்லில் சூடுபிடிக்கும் பொங்கல் விற்பனை.. 

X
நாமக்கல்

நாமக்கல்

Pongal 2023 : நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி, ஆண்டாபுரம், வலையப்பட்டி, அணியாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி, ஆண்டாபுரம், வலையப்பட்டி, அணியாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இந்த பூக்கள் நாமக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று விற்பனை செய்கின்றனர். அந்த வகையில் இன்று நாமக்கல் பூ மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை சூடுபிடித்தது.

கடந்த வாரம் கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ இன்று கிலோ ரூ.400க்கும், ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூ நேற்று கிலோ ரூ.100க்கும் விற்பனையாகின. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.400க்கு விற்பனையான முல்லை பூ கிலோ ரூ.2500க்கும், கிலோ ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்ட சாமந்தி பூ கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மல்லிகை பூவின் வரத்தும் குறைவாக இருந்ததால் கடந்த வாரம் கிலோ 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ இன்று கிலோ ரூ.2,500க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையை ஒட்டி பூஜை நடைபெறுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் ‘கிடுகிடு’ என உயர்ந்து இருப்பதாகவும், பொங்கல் பண்டிகை முடியும் வரை பூக்களின் விலை அதிகரித்தே காணப்படும் எனவும் பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Namakkal, Pongal 2023