Home /namakkal /

கொட்டும் கனமழை... நாமக்கல் மக்கள் இவற்றையெல்லாம் கட்டாயம் செய்ய அறிவுறுத்தல்

கொட்டும் கனமழை... நாமக்கல் மக்கள் இவற்றையெல்லாம் கட்டாயம் செய்ய அறிவுறுத்தல்

நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் ஆட்சியர்

தென் மேற்கு பருவ மழை இயல்பைவிட அதிகமாக பெய்துவரும் நிலையில், வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு தீவிரம் காட்டி வருகிறது. அங்காங்கே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை, தமிழகத்தில் சராசரி இயல்பு அளவான 21 செ.மீ. மழையை விட, 87 சதவீதம் அதிகமாக இந்த ஆண்டு 40 செ.மீ. மழை பெய்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தின் 18 மாவட்டங்களில் 100 சதவீதத்துக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை, கடந்த 122 ஆண்டுகளில் இயல்பான அளவை விட, 93 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. வானிலை மைய புள்ளி விபரப்படி, 1906ஆம் ஆண்டு 112 சதவீதமும், 1909ல் 127 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து, இப்போது மூன்றாவது முறையாக, இந்த (2022) ஆண்டு ஆகஸ்ட்டில் அதிக மழை பொழிவு பதிவாகியுள்ளது. தென் மேற்கு பருவ மழைக் காலத்தில், ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை, 39.21 செ.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைவிட 87 சதவீதம் கூடுதல் ஆகும்.

    தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவமழை தற்போது தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    தற்போது மழைக் காலத்தை ஒட்டி பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், டெங்கு, மலேரியா, மஞ்சள் காமாலை மற்றும் வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் நன்கு கொதித்து ஆறிய நீரையே குடிநீராக பயன்படுத்த வேண்டும். அல்லது குளோரினேசன் செய்யப்பட்ட நீரினை மட்டுமே குடிக்க வேண்டும்.

    சூடான உணவு பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும். தேவை இன்றி தேங்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி