Home /namakkal /

மக்களே... நோய்த் தொற்றைத் தவிர்க்க தண்ணீரை காய்ச்சி குடியுங்கள்

மக்களே... நோய்த் தொற்றைத் தவிர்க்க தண்ணீரை காய்ச்சி குடியுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பருவமழையின் காரணமாக நோய்த்தொற்றுகள் பரவும் வாய்ப்புள்ளதால் தண்ணீரை கொதிக்க வைத்து பருக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பருவமழை தொடங்கி உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் உடல் அடிக்கடி சரி இல்லாமல் போகலாம். இதனால் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மழைக்காலத்தில் நீர் மூலம் பரவும் நோய்கள், கொசுக்களினால் பரவும் நோய்கள், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் என பலவிதமான நோய்கள் உடலை தாக்குவதற்கான நிலை ஏற்படலாம். இதனால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் சரியான உணவு முறையை மேற்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக நாம் அருந்தும் தண்ணீர் மூலமாகவும் மழைக்காலங்களில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில் கன மழையின் போது கழிவு நீர் குடிநீரிலும் கலந்து தொற்றுகள் எளிதில் பரவும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

    மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் வெப்பநிலை குறைந்து குளுர்ச்சியாக நிலையில் இருக்கும்போது அப்படியே நேரடியாக குடித்தால் சளி, இருமல், காய்ச்சலுக்குக் வருவதற்கு காரணமாக அமைந்துவிடலாம்.

    அதேசமயம் கன மழையின் போது மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும். இதனால் ஆற்றில் வெள்ள நீர் கலங்கிய நிலையில் வெளியேறி வரும் சூழ்நிலை உள்ளது. அதிக அளவு தண்ணீர் கலங்கிய நிலையில் வருவதை சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்யப்பட்டாலும் குடிநீர்‌ நிறைய பேருக்கு ஒவ்வாமையை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ஆகையால் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கும் பதத்தில் ஆற வைத்து பருகுவது அவசியமாக உள்ளது. தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதில் இருக்கும் வைரஸ், பாக்டீரியாக்கள், கிருமிகள், பூஞ்சை தொற்றுகள் போன்றவை முற்றிலுமாக அழிந்துவிடும் என்பதால் தண்ணீர் காய்ச்சி பருக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி