ஹோம் /நாமக்கல் /

குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை - நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை

குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை - நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல்

நாமக்கல்

Namakkal District Action for Employment of Child Labour | நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ஸ்ரேயா சிங்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் உட்கோட்டம் மற்றும் திருச்செங்கோடு உட்கோட்டம் ஆகிய பகுதிகளில் வருவாய்துறை அலுவலர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சைல்டு லைன் உறுப்பினர்கள் மற்றும் போலீசார் இணைந்து குழந்தை தொழிலாளர்கள் குறித்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க :  நாமக்கல்லில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய காட்டெருமை

இதில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட 2 குழந்தை தொழிலாளர்கள் உள்பட 29 சிறுவர், சிறுமிகளை அதிகாரிகள் குழுவினர் மீட்டனர்.

கலெக்டர் எச்சரிக்கை:

இந்த ஆய்வின்போது முத்துகாபட்டியில் உள்ள செங்கல் சூளையில் 16 வயதுடைய 2 ஆண் வளரிளம் பருவத்தினர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். இதேபோல் படைவீடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த 13 வயதுடைய 2 பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், 20 பெண் வளரிளம் பருவத்தினர், 5 ஆண் வளரிளம் பருவத்தினர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 29 சிறுவர், சிறுமிகளும் பாதுகாப்பு நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க : நாமக்கல் விவசாயிகளே பயன்படுத்தி கொள்ளுங்கள்..! பட்டா மாறுதலுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.!

இந்த நிறுவனங்களின் மீது வழக்குப்பதிவு செய்தல் போன்ற தொடர் நடவடிக்கைகள் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வளரிளம் பருவத்தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியபின் அவர்களது விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் ஏதும் பராமரிக்கப்படவில்லை.

மேலும், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டத்தின் கீழ் அனுமதி பெறவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகள், கோழிப்பண்ணைகள், நூற்பாலைகள், உணவு நிறுவனங்கள், வாகனம் பழுது பார்க்கும் பணிமனைகள், டெக்ஸ்டைல்ஸ், திருமண மண்டபங்கள் மற்றும் அனைத்து தொழில் இடங்களிலும் தொடர் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் குறைந்தபட்ச அபராதம் ரூ.20 ஆயிரம் விதிக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரேயா சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal