முகப்பு /நாமக்கல் /

குமாரபாளையம் கிராம காவல் தெய்வம் காளியம்மனுக்கு நள்ளிரவில் சிறப்பு அபிஷேகம்!

குமாரபாளையம் கிராம காவல் தெய்வம் காளியம்மனுக்கு நள்ளிரவில் சிறப்பு அபிஷேகம்!

X
அம்மனுக்கு

அம்மனுக்கு அபிஷேகம்

namakkal abishegam | நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பக்தர்கள் கொண்டு வந்த அபிஷேக பொருட்களை கொண்டு காளி அம்மனுக்கு அபிஷேகம செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் காவல் தெய்வமாக விளங்கும் புகழ் பெற்ற காளியம்மன் திருக்கோவில் உள்ளது, இந்த கோயிலில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நள்ளிரவில் தொடங்கியது,

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பால், தயிர் மஞ்சள், மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

இதனை தொடர்ந்து குமாரபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

First published:

Tags: Festival, Local News, Namakkal