நாமக்கல் இராசிபுரம் அருகே 50ஆண்டுக்கும் மேலாக பத்ரகாளியம்மனுக்கு எருமைகிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்தும் விநோத திருவிழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேட்டுகாடு பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் தைமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நடைபெற்ற திருவிழாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் கன்னம் மற்றும் நாக்கு, முதுகு ,உள்ளிட்ட பகுதிகளில் அலகு குத்தி கொண்டும் கரகம் எடுத்துகொண்டும் ஊர்வலமாக சென்று அங்கு ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட எருமைகிடாக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது.
அதன் மீது நீரை ஊற்றி முதலில் துலுக்கும் எருமைகிடாவை கோவிலின் அருகில் வெட்டப்பட்டிருந்த 6 அடி குழியில் வெட்டி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக கரகம் மற்றும் அலகு குத்தியவர்கள் அக்னி குண்டத்தில் இறங்கிய பின்பு எருமைகிடா பலியிடப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இது சுமார் 50ஆண்டுக்கும் மேலாகவே இந்த விநோத நிகழ்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது .இந்த நிகழ்ச்சியை ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம்,சீராபள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal