முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் 300 பேர் ஒரே நேரத்தில் யோகாசனம் செய்து சாதனை

நாமக்கல்லில் 300 பேர் ஒரே நேரத்தில் யோகாசனம் செய்து சாதனை

X
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியி

Namakkal World Record yoga competition | ஒரே இடத்தில் வட்டையாசனம் எனப்படும் யோகாசனம் 300 நபர்கள் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் செய்து உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

குமாரபாளையத்தில் மூன்று வயதில் இருந்து 30 வயது வரை உள்ள சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வட்டை ஆசனம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு யோகா ஃபெடரேஷன் அமைப்பின் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, கடலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் ஒரே இடத்தில் வட்டையாசனம் எனப்படும் யோகாசனம் 300 நபர்கள் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் செய்து உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மூன்று வயதில் இருந்து 30 வயது வரை உள்ள 300 பேர் கலந்து கொண்டு தொடர்ந்து ஐந்து நிமிடம் வரை ஆசனம் செய்து காண்பித்தனர். இந்த நிகழ்வை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு அங்கீகரித்து. இந்த உலக சாதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் தேசிய அளவில் யோகா போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மதுமிதா கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

First published:

Tags: Local News, Namakkal