முகப்பு /நாமக்கல் /

தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் விநாயகர்.. நாமக்கல் சிற்பி அசத்தல்!

தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் விநாயகர்.. நாமக்கல் சிற்பி அசத்தல்!

X
நாமக்கல்

நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியை சேர்ந்தவர் சிற்பி ஜெகதீசன்.

Namakkal Sculptor | நாமக்கல்லில் பரம்பரை பரம்பரையாக சிற்ப தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறான விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal | Namakkal

தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் விநாயகர் சிற்பத்தை செய்து நாமக்கல்லை சிற்பி அசத்தியுள்ளார்.

நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியை சேர்ந்தவர் சிற்பி ஜெகதீசன். இவர் பரம்பரை பரம்பரையாக சிற்ப தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். இவர் சிற்ப தொழிலில் புதுமையை புகுத்தி வித்தியாசமான சிலைகளை செய்வதில் வல்லவர். இவர் செய்த ஒற்றை கல்லினால் ஆன சங்கிலி மிகவும் தத்ரூபமாக இருக்கும். அதேபோல் ஒற்றை கல்லில் தேர் மற்றும் புல்லாங்குழலை செய்து 2009-ல் அப்போதைய வெளியுறவு துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி கைகளால் தேசிய விருதும் வாங்கியவர்.

இந்நிலையில் சிற்பி ஜெகதீசன் கல்லினால் ஆன விநாயகர் சிலை, மாடம் மற்றும் படகுகளை செய்து அசத்தியுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால் விநாயகர் சிலை, மாடம் மற்றும் படகுகள் ஆகியவை தண்ணீரில் மிதக்கும் வகையில் சிற்பி ஜெகதீசன் வடிவமைத்துள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்றாகும். இவரது தண்ணீரில் மிதக்கும் கல் விநாயகரை அக்கம்பக்கத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து சிற்பி ஜெகதீசன் கூறுகையில், பரம்பரை பரம்பரையாக சிற்ப தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறான விநாயகர் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளதாகவும் தண்ணீர் மிதக்கும் வகையில் கல்லால் அதன் எடைக்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளதாகவும் ஏற்கனவே இதுபோன்று புதுவிதமாக பல சிற்பங்களை வடிவமைத்துள்ளதாகவும் அந்த அடிப்படையில் விநாயகர் சிலையை வடிவமைத்தாகவும் தெரிவித்தார்.

பொதுவாகவே தமிழர்கள் கட்டிட கலையிலும் சிற்ப கலையிலும் கைதேர்ந்தவர்கள் என்பது அறிந்ததே. தஞ்சை பெரிய கோயில் முதல் சிற்றூர்களில் உள்ள கோயில்களில் உள்ள சிற்பங்களை வடிவமைப்பதில் தமிழர்களை விட ஈடு இணையற்றவர்கள் யாருமில்லை. அந்த வகையில் ஜெகதீசனின் சிற்ப கலைகளை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Namakkal, Statue