Home /namakkal /

நாமக்கல் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம்

அர்த்தநாரீஸ்வரர் கோவில்

அர்த்தநாரீஸ்வரர் கோவில்

Namakkal latest news | நாமக்கல் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து வழிபட்டனர்.

    பௌர்ணமியை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் மலையைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று வழிநெடுகிலும் உள்ள கோயில்களில் விளக்குகள், கற்பூரம் ஏற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வழிபாடு நடத்தினர்.

    நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் உள்ளது. இங்கு மூலவர் சிவனும் பார்வதியும் ஆண் பாதியாகவும், பெண் பாதியாகவும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.

    அர்த்தநாரீஸ்வரர் கோவில்


    மேலும் அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலமாக சிறந்து விளங்குகிறது. மலைக் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌவுர்ணமி அன்று உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கிரிவலம்


    அதன்படி இன்று பௌர்ணமி முன்னிட்டு பிற்பகல் 3 மணி முதலே கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் மலைச் சுற்றி வந்தனர்.

    அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கிரிவலம்


    முன்னதாக மலை அடிவாரம் முன்பு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விளக்கு மற்றும் சூடம் ஏற்றியும், உடல் நலத்துடனும், மகிழ்வுடனும் வாழ இறைவனை வேண்டிக் கொண்டு கிரிவலத்தை பக்தர்கள் தொடங்கினார்கள்.

    அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கான கூகுள் மேப்:


    அதன் பின் சுமார் நான்கு கிலோமீட்டர்க்கு மேல் கொண்ட மலைப்பாதை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். மேலும் அதிக அளவில் பக்தர்கள் சாலையில் இருபுறமும் கிரிவலம் சென்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி