Home /namakkal /

நாமக்கலில் நடைபெற்ற மாபெரும் ரிக் தொழில்நுட்ப கண்காட்சி

நாமக்கலில் நடைபெற்ற மாபெரும் ரிக் தொழில்நுட்ப கண்காட்சி

நாமக்கல் ரிக் கண்காட்சி

நாமக்கல் ரிக் கண்காட்சி

நாமக்கல் மாவட்டத்தில் மாபெரும் ரிக் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருச்செங்கோடு ரிக் இன்ஜினியரிங் சர்வீஸ் சென்டர் அசோசியேசன் இணைந்து ஏற்பாடு செய்த இந்திய அளவிலான மூன்றாம் ஆண்டு ரிக் வாகனம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விளங்கி வரும் லாரி பாடி பில்டிங் மற்றும் ரிக் தொழிலில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. இதில் திருச்செங்கோடு நகரின் பிரதான தொழிலாக இருக்கும் ரிக் வண்டியில் காலத்திற்கேற்ப பல்வேறு தொழில் நுட்பங்களை கொண்டு வருவதும், தாங்களே உருவாக்குவதும் என பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிநவீன டிராக்டர்


     

    அந்த வகையில் ரிக் தொழிலை மேம்படுத்தும் வகையிலும், நவீன தொழில் நுட்பங்களை ரிக் உரிமையாளர்கள் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் திருச்செங்காடு ரிக் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ரிக் இன்ஜினியர்ஸ் மற்றும் சர்வீஸ் சென்டர் அசோசியேசன் ஆகியவை இணைந்து இந்திய அளவிலான ரிக் தொழில்நுட்ப கண்காட்சியை ஆனங்கூர் செல்லும் வழியில் உள்ள காரப்புளிமேடு பகுதியில் நடத்தினர்.

    கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஆழ்துளையிடும் வாகனம்


    இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய புதிய தொழில்நுட்பம் கொண்ட ரிக் தொழிலுக்கு தேவையான பொருட்கள், டிராக்டர், பேரிங், பிட், பேட்டரி, இன்ஜின் என பல பொருட்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.

    கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஜேசிபி


    மேலும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கம்ப்ரசர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரிக் வண்டிகள், உதிரிபாகங்கள் மற்றும் இந்திய அளவிலான நிறுவனங்களின் தயாரிப்புகள் கண்காட்சிக்கு வைக்கபட்டிருந்தன. அதுமட்டுமின்றி ஒவ்வொரு இயந்திரங்களும் அதி நவீன தொழில்நுட்பங்களில் எவ்வாறு செயல்பாடுகிறது என்பது குறித்து நேரடி செயல் விளக்கமும் கண்காட்சிக்கு வருபவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் உள்புற அரங்குகள் மற்றும் வெளிப்புற அரங்குகள் என என 60க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டன.

    அதி நவீன தொழில்நுட்பம் சென்று கொண்டிருக்கிற காலகட்டத்தில் எப்படி புது தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மற்றும் ரிக் தொழிலை எவ்வாறு வளர்த்துக் கொள்வது குறித்த நடைபெற்ற கண்காட்சியை இந்திய அளவில் ஏராளமான ரிக் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மற்றும் மக்கள் என அதிக அளவில் வந்து பார்வையிட்டு சென்றனர்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி