ஹோம் /நாமக்கல் /

நாமக்கலில் 20 ஆண்டுகளாக சிறு தானிய திண்பண்டங்களை விற்பனை செய்து அசத்தும் குடும்பம்

நாமக்கலில் 20 ஆண்டுகளாக சிறு தானிய திண்பண்டங்களை விற்பனை செய்து அசத்தும் குடும்பம்

சிறுதானிய திண்பண்டக் கடை

சிறுதானிய திண்பண்டக் கடை

நாமக்கலில் சிறு தானியங்கள் மூலம் செய்யப்பட்ட திண்பண்டங்களை விற்பனை செய்யும் கடையை ஒரு குடும்பத்தினர் 20 ஆண்டுகளாக நடத்திவருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Namakkal, India

  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி பழைய ஆற்றுப் பாலம் பகுதியில் அமைந்துள்ளது இந்த சிறு தானிய உருண்டைக் கடை. பொதுவாக நம்முடைய உடல் நலமும், உடல் இயக்கமும் நாம் உண்ணும் உணவுகள் தீர்மானிக்கின்றன. கடைகளிலும், உணவகங்களிலும் விற்கப்படும் துரித உணவு வகைகள் மற்றும் வறுத்த, எண்ணெயில் பொறித்த உணவுப்பொருள்களை அடிக்கடி உண்ணும் போது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.

  இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பல வருடங்களாக உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத சிறுதானிய உணவு பொருட்களான எள் உருண்டை, கடலை உருண்டை போன்ற உணவுப் பொருள்களை வீட்டுமுறையில் தயாரித்து திண்பண்டங்களாக விற்பனை செய்து வருகின்றனர் நாகப்பன் குடும்பத்தினர்.

  சிறுதானிய திண்பண்டக் கடை

  சிறுதானிய திண்பண்டக் கடை

  இதுகுறித்து நாகப்பன் கூறுகையில், "முதலில் சந்தை வியாபாரமாக பொரிக்கடலை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தோம். அதன் பின் ஒரு சிறிய கடை போன்று வைத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் வியாபாரம் செய்து வருகிறோம். என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது கடையை பார்த்து வருகிறார்கள்.

  வளர்ந்து வரும் காலத்தில் உண்ணும் உணவுகள் சரியான முறையில் இல்லாததால், உடலுக்கு ஆரோக்கியமான சிறுதானிய உணவுகளை திண்பண்டங்களாக விற்பனை செய்யத் தொடங்கினோம். இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.

  சிறுதானிய திண்பண்டக் கடை

  இங்கு வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரையை சேர்த்து தயாரித்த திண்பண்டங்கள், கடலை மிட்டாய், கடலை பர்பி, கடலை உருண்டை, எள் உருண்டை, கம்பு உருண்டை, பாசிப்பயறு உருண்டை, நரிபயறு உருண்டை, கொள்ளு வடகம், கொள்ளு தட்டுவடை, கடலைமாவு நொறுக்குகள், சிறுதானிய உருண்டைகள், ராகி உருண்டை, நவதானிய உருண்டை, சாமை உருண்டை, ராகி முறுக்கு, சாமை வடகம், தினை முறுக்கு என அனைத்து வகையான பொருட்களை மக்கள் விரும்பும் வகையில் உருண்டையாக தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

  பொதுவாக கடைகளில் விற்கப்படும் நிறைய நொறுக்கு தீனி வகைகள் பாலித்தீன் பைகளில் அடைத்தும், அதிக அளவில் அளவில் எண்ணெயில் பொறித்த திண்பண்டங்களும் விற்பனைக்கு வருகின்றன. இதனை தவிர்த்து உடலுக்கு ஆரோக்கியமான சிறுதானிய உணவுகளை திண்பண்டங்களாக வழங்க வேண்டும் என்று இந்த விற்பனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

  செய்தியாளர்: மதன் - நாமக்கல்

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal