ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்லில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய காட்டெருமை

நாமக்கல்லில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய காட்டெருமை

நாமக்கல்

நாமக்கல்

Bison in Namakkal | ஏற்காடு பகுதியில் இருந்து வழிதவறி ஊருக்குள் புகுந்து காட்டெருமை ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்து நிலையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து வழிதவறி நாமக்கல் பகுதியில் புகுந்து காட்டெருமை ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்து நிலையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி பிரிவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டெருமை ஒன்று மேய்ந்துள்ளது. இதனை பார்த்த மக்கள் அச்சம் அடைந்தனர்.மேலும் காட்டெருமை குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது.

இதையும் படிங்க ; வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் - நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் எருமையை பார்த்ததாக அங்குள்ள மக்கள் பலர் கூறியுள்ளனர். இதனையடுத்து சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஈரோடு மாவட்ட வன அலுவலர் என 40க்கும் மேற்பட்டோர் காட்டெருமை தேடி வந்தனர்.

இதற்கிடையில், காட்டெருமை ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்துள்ளது. மேலும் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் தேடிவந்துள்ளனர். இப்பகுதியில் கரும்பு தோட்டங்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளதால் காட்டெருமை அதற்குள் புகுந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், காட்டெருமை சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ள கரும்பு காட்டில் உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் காட்டெருமை வாகனத்தில் ஏற்றி சக்தியமங்கலம் காட்டுப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

செய்தியாளர் : மதன்குமார்.S

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal