முகப்பு /நாமக்கல் /

ராசிபுரத்தில் பயங்கர சூறாவளி காற்று.. 5000 வாழை மரங்கள் சாய்ந்து நாசம்..

ராசிபுரத்தில் பயங்கர சூறாவளி காற்று.. 5000 வாழை மரங்கள் சாய்ந்து நாசம்..

X
நாமக்கல்லை

நாமக்கல்லை புரட்டிப்போட்ட சூறாவளி காற்று

Tornado in Rasipuram : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சூறாவளி காற்றினால் 40 லட்சம் மதிப்பிலான 5000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளுக்குறிச்சி, பெரப்பஞ்சோலை, மூலக்குறிச்சி, பெரிய கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் 500க்கு ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்களை சாகுபடி செய்துள்ளனர்.

இப்பகுதியில் மையப் பகுதியாக முள்ளுக்குறிச்சியில் தினந்தோறும் கொல்லிமலையில் இருந்து கொண்டுவரப்படும் வாழை மரங்கள் சுற்றுவட்டார பகுதியில் சாகுபடி செய்யும் வாழை மரங்களையும் மண்டிகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழையால் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவைகள் விழுந்தன.

அங்குள்ள பெரப்பஞ்சோலை சூரியன் காடு பகுதியை சேர்ந்தவர்சுப்ரமணியன் (50) இவர் தனது 4 ஏக்கர் பரப்பளவில் செவ்வாழை மரங்களை நடவு செய்து வளர்த்து வருகிறார். அவை, அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், அங்கே வீசிய சூறாவளி காற்றால் 2500க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து நாசமாயின.

சூறாவளியால் சேதமான வாழை மரங்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அதேபோல அருகாமையில் உள்ள விவசாய நிலங்களிலும் 3000க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. தற்போது பெரப்பஞ்சோலை பகுதியில் மட்டும் 40 லட்சம் மதிப்பிலான 5000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சாய்ந்த விழுந்தது விவசாயிகளிடையே பெரும் வேதனையையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

    First published:

    Tags: Local News, Namakkal, Weather News in Tamil