முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் 1.50 கோடி ரூபாய்க்கு 5000 பருத்தி மூட்டைகள் ஏலம்..

நாமக்கல்லில் 1.50 கோடி ரூபாய்க்கு 5000 பருத்தி மூட்டைகள் ஏலம்..

X
பருத்தி

பருத்தி மூட்டைகள்

Namakkal News : நாமக்கல்லில் 1.50 கோடி ரூபாய்க்கு 5000 பருத்தி மூட்டைகள் ஏலம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், துறையூர் முசிறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6,369 முதல் ரூ.8,635 வரையிலும், மட்ட ரகம் ரூ.4,299 முதல் ரூ.7,200வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் 5000 பருத்தி மூட்டைகள் 1.50 கோடி ரூபாய்க்கு ஏலம்போனது.

கடந்த வார ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6,869 முதல் ரூ.8,825 வரையிலும், டி.சி.எச் ரகம் ரகம் குவிண்டால் ரூ.8,410 முதல் ரூ.8,699 வரையிலும் மட்ட ரகம் ரூ.4,599 முதல் ரூ.7,699 வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் 6600 பருத்தி மூட்டைகள் 2 கோடி ரூபாய்க்கு ஏலம்போனது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்த வாரங்களை விட இந்த வாரம் பருத்தியின் விலை சற்று குறைந்துள்ளது. வரும் காலங்களில் விலை உயர வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Namakkal