Home /namakkal /

Namakkal | புதிய பேருந்து நிலையம் அருகே 20 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Namakkal | புதிய பேருந்து நிலையம் அருகே 20 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நாமக்கல் கடை அகற்றம்

நாமக்கல் கடை அகற்றம்

Namakkal | நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த 32 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

    நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மன் குளக்கரை ஓரத்தில் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 32 சாலையோர கடைகள் நகராட்சி ஆணையாளர் உத்தரவுபப்படி அதிரடியாக அகற்றப்பட்டன.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் அம்மன் குளக்கரை உள்ளது. இதன் அருகே சாலையோர துணிக் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்ற கடைகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவந்தன.

    தற்போது அம்மன் குளக்கரையை மேம்படுத்தி நடைமேடை அமைக்க ரூபாய் 40 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ள குளத்தின் அருகில் 32 கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    நாமக்கல் கடை அகற்றம்


    இதனையடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. கடைக்காரர்கள் யாரும் தங்கள் கடைகளை அகற்றாமலே இருந்தனர்.

    நாமக்கல் கடை அகற்றம்


    நகராட்சி ஆணையாளர் அங்கு சென்று ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை இடிக்கும் பணியை தொடங்கினார்கள். இதனையடுத்து உரிமையாளர்கள் தாங்களாகவே கடைகளை அகற்றி கொள்கிறோம். இடிக்க வேண்டாம் என கூறியதை அடுத்து அகற்றி கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடைகள் அகற்றப்பட்டன.

    நாமக்கல் கடை அகற்றம்


    நாமக்கல் கடை அகற்றம்


    மேலும் தமிழக அரசு நகராட்சி பகுதியில் உள்ள 5 நீர்நிலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கி கரைகள் மேம்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மன்குளம் பகுதியில் நீர்நிலையை மேம்படுத்தி பராமரிக்கப்பட உள்ளதால் ஆக்கிரமிப்பு செய்து இருந்த கடைகள் அகற்றப்பட்டது என்று தெரிவித்தனர்.

    தற்போது அங்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக துணி கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் தங்களது கடைகள் அகற்றப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் உள்ளனர்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி