ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்லில் மணமக்களுக்கு தலா 2 கிராம் தங்கம் நாணயங்களை வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல்லில் மணமக்களுக்கு தலா 2 கிராம் தங்கம் நாணயங்களை வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்

தங்க நாணயம் வழங்கும் அமைச்சர்

தங்க நாணயம் வழங்கும் அமைச்சர்

Namakkal | நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற அலுவலகத்தில், மணமக்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற அலுவலகத்தில், திமுக சார்பில் 29 மணமக்களுக்கு தலா 2 கிராம் தங்கம் நாணயங்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற அலுவலகத்தில், மணமக்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான KRN.ராஜேஷ்குமார் மற்றும் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு 29 மணமக்களுக்கு தலா 2 கிராம் தங்க நாணயங்களை வழங்கினர்.

நாமக்கல்| சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா- உடலில் கத்தி போட்டு நேர்த்தி கடன் செலுத்திய இளைஞர்கள்

இந்த நிகழ்ச்சியில், ராசிபுரம் நகர திமுக செயலாளர் சங்கர், ராசிபுரம் நகர மன்ற தலைவர் கவிதா கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: பிரதாப், நாமக்கல்.

First published:

Tags: Local News, Namakkal