முகப்பு /நாமக்கல் /

நாளை துவங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு.. நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!

நாளை துவங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு.. நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal News | நாமக்கல் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு நாளை (மார்ச் 13ம் தேதி) துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தேர்வில், மாணவர்கள் 10 ஆயிரம் பேர், மாணவியர் 9,877 பேர் என மொத்தம் 19 ஆயிரத்து 877 பேர் எழுதுகின்றனர். அதற்காக 85 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணியில், முதன்மை கண்காணிப்பாளர்கள் 85 பேர், துறை அலுவலர்கள் 85 பேர், அறை கண்காணிப்பாளர்கள் 1,377 பேர், நிலையான படையினர் 220 பேர், வழித்தட அலுவலர்கள் 20 பேர் என மொத்தம் 1,787 அலுவலர்கள் பள்ளி கல்வித்துறை மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முதன்மை கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுப்பாட்டு மைய பொறுப்பாளர்கள் ஆகியோருக்கான தேர்வு முன் ஆயத்த கூட்டம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவி, கணேசன், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, கூட்டத்தில் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “கல்வியாளர்களாகிய நாம் அனைவரும், தேர்வு நேரங்களில், மாணவர் நலனின் முழு அக்கறையோடு செயல்பட வேண்டும். பொதுத் தேர்வு பணியில் ஈடுபடக்கூடிய அனைவரும், கவனமாக பணியாற்ற வேண்டும். அலுவலர்கள் அனைவரும் இணைந்து, திட்டமிட்டு செயல்பட வேண்டும். நமக்கு மேலே ஒரு கண்காணிப்பு அலுவலர் இல்லாமலேயே ஒழுக்க சீலராக செயல்பட வேண்டும். தேர்வுக்கு வரும் மாணவ மாணவிகளை, வாழ்த்தி மகிழ்ச்சியோடு தேர்வு மையத்தக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதையும் படிங்க : கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

அக்கறையுடனும், அனுசரணையுடனும், மேலும், கண்டிப்புடனும் செயல்பட வேண்டும். தேர்வு மையத்தில், மொபைல் போன் கொண்டு செல்ல முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்  பேசினார். இதில் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் பெரிசாமி, முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Namakkal