ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்லில் நடைபெற்ற வழுக்கு மர போட்டியில் கெத்து காட்டிய இளசுகள்!

நாமக்கல்லில் நடைபெற்ற வழுக்கு மர போட்டியில் கெத்து காட்டிய இளசுகள்!

X
வழுக்கு

வழுக்கு மரம் ஏறும் இளைஞர்கள்

Namakkal tree climb competion | இதில் பரமத்திவேலூர் காப்பணம்பாளையம் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 அணி வீரர்கள் குழுவாக கலந்து கொண்டு மரத்தின் உயரத்தை எட்ட முயன்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal | Namakkal | Paramathi

பொங்கல் பண்டிகையை ஒட்டி நாமக்கல் அருகே வழுக்கு மரம் ஏறும் போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் அடுத்த கோனூர் பகுதியில் லயன்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பாக 36ஆம் ஆண்டாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஒட்டி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாத நிலையில் இவ்வாண்டு போட்டிகள் நடைபெற்றன. இதனை ஒட்டி 30 அடி உயரம் கொண்ட செங்குத்தான கம்பத்தில் விளக்கெண்ணெய், கிரீஸ், உள்ளிட்டவை பூசப்பட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.

இதில் பரமத்திவேலூர் காப்பணம்பாளையம் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 அணி வீரர்கள் குழுவாக கலந்து கொண்டு மரத்தின் உயரத்தை எட்ட முயன்றனர். மரம் அதிகமாக வலுக்கியதால் மாலை 7 மணிக்கு துவங்கிய போட்டி இரவு 10 மணி வரை நடந்தது.

இறுதியாக பரமத்தி கோப்பனம்பாளையம் அணி வீரர்கள் 5 பேர் துணிச்சலாக ஒருவர் மீது ஒருவர் ஏறி வழுக்கு மரத்தின் உச்சியை அடைந்து வெற்றி மாலையை பறித்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டது. இந்த போட்டிகளை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

First published:

Tags: Local News, Namakkal, Pongal festival