முகப்பு /Namakkal /

Namakkal : பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகள் விவரங்கள் இதோ!

Namakkal : பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகள் விவரங்கள் இதோ!

நாமக்கல் - பொதுத்தேர்வு முடிவுகள் 2022

நாமக்கல் - பொதுத்தேர்வு முடிவுகள் 2022

Namakkal District : நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 88.88 சதவீதம் பேரும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.70 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.70 சதவிகிதத்தினர் , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.88 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு  கடந்த மே மாதம் தொடங்கி இறுதியில் முடிவடைந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 9,392 மாணவர்கள், 9,705 மாணவிகள் என மொத்தம் 19,097 பேர் எழுதியிருந்தனர். இதற்காக மாவட்டத்தில் 82 தேர்வு மையங்கள் அமைப்பட்டு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 304 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் சேர்ந்த 19,789 மாணவர்கள், மாணவிகள் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில் இன்று பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று தெரிவித்து அதற்கான வழிகாட்டி முறைகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகி நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 88.88 சதவீதம் பேரும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.70 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களின் விபரம்,

தேர்வு எழுதியவர்கள்

மாணவர்கள்-10,384

மாணவிகள்-9405

மொத்தம்-19,789.

தேர்ச்சி பெற்றவர்கள்:

மாணவர்கள்-8,750

மாணவிகள்-8,839

மொத்தம்-17,589.

தேர்ச்சி பெறாதவர்கள்: 2,200.

மொத்தம்-88.88% சதவீதத்தினர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதேபோல், இதில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விபரம்..

தேர்வு எழுதியவர்கள்

மாணவர்கள்- 9392

மாணவிகள்-9705

மொத்தம்-19,097

தேர்ச்சி பெற்றவர்கள்:

மாணவர்கள்-8,725

மாணவிகள்-9,359

மொத்தம்-18,084.

தேர்ச்சி பெறாதவர்கள்: 1,103.

என மொத்தம் 94.70% சதவீதத்தினர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் 14 நான்கு அரசுப் பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 8 அரசுப் பள்ளிகள் தேர்வு எழுதிய அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தங்களது பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் விவரம்

( அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி -

பாண்டமங்கலம்

அரசு மேல்நிலைப்பள்ளி -

பாச்சல்

அரசு மேல்நிலைப்பள்ளி -

கரிச்சிபாளையம்

அரசு மேல்நிலைப்பள்ளி -

கபிலர் மலை

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி -

இராமாபுரம்

அரசு மேல்நிலைப்பள்ளி -

பொம்மம்பட்டி

ஏகலைவா மேல்நிலைப்பள்ளி

(பழங்குடியினர் நலத்துறை)

செங்கரை...கொல்லிமலை

நேரு நினைவு சம்பூரணி அம்மாள் மேல்நிலைப் பள்ளி

(சமுக நலத் துறை)

குமாரபாளையம் )

ஆகிய பள்ளிகளில் சேர்ந்த மாணவ மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தங்களது பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

செய்தியாளர்: மதன் - நாமக்கல்

First published:

Tags: 10th Exam Result, 12th Exam results, Exam results, Namakkal