முகப்பு /செய்தி /நாகப்பட்டினம் / நாகையில் பெண் மருத்துவரை ஹிஜாப்பைக் கழட்ட சொன்ன பாஜக நிர்வாகி கைது... காவல்துறை அதிரடி

நாகையில் பெண் மருத்துவரை ஹிஜாப்பைக் கழட்ட சொன்ன பாஜக நிர்வாகி கைது... காவல்துறை அதிரடி

கைதான பாஜக நிர்வாகி

கைதான பாஜக நிர்வாகி

அரசு பணியின் போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும். மருத்துவர்க்கு என்று சீருடை கிடையாதா? உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா? என்று கேள்வி எழுப்பிய புவனேஸ்வர்ராம் பெண் மருத்துவரை தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.

  • Last Updated :
  • Nagapattinam, India

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் டாக்டர் ஜன்னத். இஸ்லாமியரான அவர், புதன்கிழமையன்று இரவு பணியில் இருந்துள்ளார்.

அப்போது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம், தனது உறவினர் சுப்பிரமணியனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

நெஞ்சு வலியால் துடித்த சுப்பிரமணியனை சோதித்த ஜன்னத், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், உடனே தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என 108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிக்க : கிராம மக்களின் அன்பால் நெகிழ்ந்த நாகை ஆட்சியர்..

ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத புவனேஸ்வர் ராம், இங்கேயேதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார். அதோடு நிற்காமல், டாக்டர் ஜன்னத், ஹிஜாப் அணிந்து கொண்டு பணியில் இருந்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அரசு பணியின் போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும். மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதா? உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா? என்று கேள்வி எழுப்பிய புவனேஸ்வர்ராம் பெண் மருத்துவரை தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.

ஒரு பெண்ணை அனுமதி இன்றி வீடியோ எடுப்பது அநாகரீகம். இரவில் பணியில் இருக்கும் பெண் மருத்துவரிடம் இப்படி நடந்து கொள்வது தவறு. என்று தெரிவித்த டாக்டர் ஜன்னத், தனது செல்போனில், புவனேஸ்வர்ராமின் அத்துமீறலை வீடியோ எடுத்தார்.

இருவர் எடுத்த வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில் ஹிஜாப் விவாகர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாஜக நிர்வாகி புவனேஸ்வர் ராமை கைது செய்யக்கோரியும் திருப்பூண்டி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் இணைந்து சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.

புவனேஸ்வர் ராமை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் டாக்டர் ஜன்னத் அளித்த புகாரின்பேரில் புவனேஸ்வர்ராம் மீது கீழையூர் போலீசார், அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அவரின் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பொய் கேஸ் கொடுத்துவிட்டு Just Fun என கூலாக கூறிய ஜெர்மன் இளைஞர்... இரண்டு நாட்கள் அலைந்து திரிந்து வெறுத்த போலீசார்...

top videos

    இதையடுத்து புவனேஸ்வர் ராம் தலைமறைவானார். அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சுப்பிரமணியன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். புவனேஸ்வர் ராமை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், புவனேஸ்வர் ராமை போலிசார் கைது செய்துள்ளனர்.

    First published:

    Tags: BJP, BJP cadre, Hijab, Nagapattinam