முகப்பு /செய்தி /நாகப்பட்டினம் / எங்க மாவட்டத்தை விட்டு போகாதீங்க கலெக்டர் சார்.. கிராம மக்களின் அன்பால் நெகிழ்ந்த நாகை ஆட்சியர்..

எங்க மாவட்டத்தை விட்டு போகாதீங்க கலெக்டர் சார்.. கிராம மக்களின் அன்பால் நெகிழ்ந்த நாகை ஆட்சியர்..

நாகை ஆட்சியர்

நாகை ஆட்சியர்

Nagapattinam Collector Arun Thamburaj Farewell : கிராம மக்கள் பலரும் கண்ணீருடன் ஆட்சியரை உரிமையோடு வார்த்தையால் தடுத்த போது, தமிழக அரசின் உத்தரவு படி கடலூர் செல்ல வேண்டுமென பிரிய மனமில்லாமல் புறப்பட்டார்.

  • Last Updated :
  • Nagapattinam, India

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஐஏஎஸ் அவர்கள் பணியிடை மாற்றம் பெற்று கடலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். இதனை அறிந்த நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாப ராமபுரம் கிராம ஊராட்சி பொதுமக்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியரை மலர் தூவி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

பிரதாபராமபுரம் ஊராட்சியில்  இலவச திறன் மேம்பாட்டு மையத்தின் அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை துவங்கி வைத்த நாகை மாவட்ட ஆட்சியர், மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் விடைபெறும் நேரத்தில் அவர் பங்கேற்கும் கடைசி நிகழ்வு என்பதால் அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு மலர்தூவி பிரியா விடை கொடுத்தனர். எங்க மாவட்டத்தை விட்டு போகாதீங்க, இங்கேயே இருங்க கலெக்டர் சார் என கிராம மக்கள் பலரும் கண்ணீருடன் ஆட்சியரை உரிமையோடு வார்த்தையால் தடுத்த போது, அதற்கு பதில் அளித்த ஆட்சியர் தமிழக அரசின் உத்தரவு படி கடலூர் செல்ல வேண்டுமென பிரிய மனமில்லாமல் புறப்பட்டார்.

கலெக்டருக்கு மலர்கள் தூவிய கிராம மக்கள்

அப்போது, வாய்ப்பு கிடைக்கும் போது ஊருக்கு வந்து எங்கள‌ எல்லாம் பாத்துட்டு  போங்க சார்னு கிராம மக்கள் உரிமையோடு கோரிக்கை விடுத்த நெகிழ்ச்சி சம்பவம் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

top videos
    First published:

    Tags: Nagapattinam