முகப்பு /செய்தி /நாகப்பட்டினம் / ஹிஜாப் அணிந்து சிகிச்சை அளித்த மருத்துவருக்கு மிரட்டல்.... பாஜக நிர்வாகிக்கு போலீஸ் வலை...!

ஹிஜாப் அணிந்து சிகிச்சை அளித்த மருத்துவருக்கு மிரட்டல்.... பாஜக நிர்வாகிக்கு போலீஸ் வலை...!

மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி

மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி

ஹிஜாப் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூண்டி மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Nagapattinam, India

நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் ஜென்னட் பிர்தௌஸ் கடந்த 24ஆம் தேதி அன்று  இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது சிகிச்சைக்காக ஒருவரை அழைத்து வந்த திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் என்பவர் அரசு பணியின் போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும், மருத்துவர்க்கு என்று சீருடை கிடையாதா? உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா என்று கேள்வி எழுப்பி அங்கு தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்.

அப்போது பெண் மருத்துவர் அனுமதி இன்றி வீடியோ பதிவு செய்வது நாகரீகம் அல்ல என அவர் வீடியோ பதிவு செய்வதை மருத்துவரும் தனது செல்போனில் பதிவு செய்தார். இந்த இரு காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே ஹிஜாப் விவாகர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூண்டி மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் சென்ற ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள்... பெங்களூருவில் அதிர்ச்சி..!

 இது குறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனிடையே பெண் மருத்துவரை பணி செய்ய விடாமலும், அவரின் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்த பாஜக நிர்வாகி மீது கீழையூர் போலீசார் 294, 353, 298, 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

top videos

    செய்தியாளர்; பாலமுத்துமணி

    First published:

    Tags: Nagapattinam