முகப்பு /செய்தி /நாகப்பட்டினம் / அச்சு அசலாக ரூ.200 கள்ள நோட்டுகள்.. திருவிழாவில் புழக்கத்தில் விட்ட சிறுவர்கள்... நாகையில் அதிர்ச்சி...

அச்சு அசலாக ரூ.200 கள்ள நோட்டுகள்.. திருவிழாவில் புழக்கத்தில் விட்ட சிறுவர்கள்... நாகையில் அதிர்ச்சி...

போலி ரூபாய் நோட்டுகள்

போலி ரூபாய் நோட்டுகள்

Nagapattinam | நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து கோயில் திருவிழாக்களில் புழக்கத்தில் விட்ட 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagapattinam, India

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கை சேர்ந்த 3 சிறுவர்கள் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளனர். மூன்று பேரும் நண்பர்களான நிலையில் தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில்  ஜெகதீஸ்வரன் என்கிற சிறுவன் தனது உறவினரின் ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

அவனுக்கு ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் போது திடீரென உதித்த ஐடியாவின் பேரில்  200 ரூபாய் நோட்டை அச்சு பிசகாமல் கம்யூட்டரில் கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்துள்ளார். மேலும் இந்த நோட்டுகளை தனது நண்பர்களான சந்தோஷ் , விசுவநாதன் ஆகியோரிடம் கொடுத்து கோவில் திருவிழாக்களில் ஐஸ்கிரீம் , பொம்மைகள் வாங்கி மாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் இவை கள்ள நோட்டு என கண்டுபிடித்த கடை உரிமையாளர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட்ட மூன்று பேரையும்  தனிப்படை போலீசார்  கைது செய்தனர்.

மேலும் படிக்க... புல்லட் ரயில் வேண்டாம்... பாதுகாப்பு தொழில்நுட்பம்தான் வேண்டும்...” - அன்புமணி ராமதாஸ் பேச்சு

மேலும் இவர்களிடமிருந்து ரூ 32,300 கள்ள நோட்டுகள் மற்றும் அதனை தயாரிக்க  பயன்படுத்திய கம்பியூட்டர், ஜெராக்ஸ் மெஷின் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி பருவத்திலேயே மூன்று சிறுவர்கள் கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட்டு போலீசாரிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பல ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: பாலமுத்துமணி, நாகப்பட்டினம்

First published:

Tags: Crime News, Fake Note, Nagapattinam, Vedaranyam