வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப் பெற்று புயலாக மாறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மயிலாடு துறையை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும். இதனால், 8ஆம் தேதி (நாளை) மாலை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை நிலை குறித்து சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் இறையன்பு உடன், தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில், புயல் சின்னம் வங்கக்கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி உள்ளது. இதனால் இன்றும், நாளையும் டெல்டா மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Must Read : ராமநாதபுரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!
புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று (புதன்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது. மேலும் மீனவர்கள் தங்கள் படகுகளையும், உடைமைகளையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fishermen, Local News, Mayiladuthurai