முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / 'அதிமுகவை ஒருங்கிணைத்து தலைமை ஏற்பேன்..' - சசிகலா அதிரடி பேச்சு!

'அதிமுகவை ஒருங்கிணைத்து தலைமை ஏற்பேன்..' - சசிகலா அதிரடி பேச்சு!

சசிகலா

சசிகலா

Vk sasikala | சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சலசலப்பு குறித்து சசிகலா பேட்டியளித்துள்ளார்.

  • Last Updated :
  • Mayiladuthurai, India

சட்டசபையில் ஓ பன்னீர்செல்வம் பேசியது தவறு இல்லை, அ.தி.மு.கவை ஒருங்கிணைத்து தலைமை ஏற்பேன் என சசிகலா பேசியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்ற வி.கே.சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அதில், சட்டசபையில் ஓபிஎஸ் இபிஎஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து கேட்ட கேள்விக்கு, மக்களால் தேர்வு செய்தவர் ஒரு தீர்மானம் கொண்டு வரும்போது ஒவ்வொருவரும் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் சார்ந்த பிரச்சனை என்பதால் அவர் பேசியது எந்த தவறும் இல்லை என கூறினார்.

அதிமுக இரண்டு அணிகளையும் ஒருங்கிணைத்து  நிச்சயமாக  தலைமை ஏற்பேன். எதிர்க்கட்சிகள் எப்படி நினைத்தாலும் அதிமுக எம்.ஜி.ஆர் போட்ட விதை அதனை வளர்த்து வந்தவர்  ஜெயலலிதா. அவர்கள் வழி வந்த நாங்கள் கட்சியை சிதறவிடாமல் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றியை பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Mayiladuthurai, OPS - EPS, Sasikala, VK Sasikala