முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / சீர்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்.. குண்டு கண்டாக தூக்கிச் சென்ற போலீஸ்

சீர்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்.. குண்டு கண்டாக தூக்கிச் சென்ற போலீஸ்

ஊராட்சி மன்ற தலைவர்களை இழுத்து சென்ற காவலர்கள்

ஊராட்சி மன்ற தலைவர்களை இழுத்து சென்ற காவலர்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்களை போலீஸார் குண்டு கட்டாக தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Mayiladuthurai, India

சீர்காழி அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஊராட்சி மன்ற தலைவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த பொதுமக்களையும் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட 16 கிராம ஊராட்சிகளுக்கு, மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட நிதி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு தெரியாமலேயே பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உமையாள்பதி ஊராட்சி தலைவர் கிள்ளிவளவன், அதிமுகவை சேர்ந்த காட்டூர் ஊராட்சி தலைவர் வடிவேல் மற்றும் திமுகவை சேர்ந்த முதலைமேடு ஊராட்சி மன்ற தலைவர் நெப்போலியன் ஆகிய நான்கு பேர் புத்தூர் கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதையும் படிங்க: திருமணத்தன்று விஷம் அருந்திய காதல் ஜோடி.. மணமகன் மரணம் - பகீர் தகவல்

 இதையடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், குண்டுக்கட்டாக தூக்கி சென்று காவல் வாகனத்தில் ஏற்றினர். அப்பொழுது அவர்களுக்கு ஆதரவாக வந்த கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, அவர்களையும் காவல்துறையினர் விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் புத்தூர் கடை வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

top videos
    First published:

    Tags: Mayiladuthurai, Tamil News