ஹோம் /மயிலாடுதுறை /

வடியாத மழைநீர்... இரவில் சாலையில் தங்கும் அவலம்... சீர்காழியில் நிவாரணம் கோரி நிற்கும் மக்கள்...

வடியாத மழைநீர்... இரவில் சாலையில் தங்கும் அவலம்... சீர்காழியில் நிவாரணம் கோரி நிற்கும் மக்கள்...

சீர்காழியில் வடியாத மழைநீர்

சீர்காழியில் வடியாத மழைநீர்

Mayiladuthurai District News : மழையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு நடத்தி உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்காத நிலையில் நேற்று ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

  இதில் மயிலாடுதுறை சீர்காழி இடையே ஆத்துக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தர்மதானபரம் என்ற கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர். இக்கிராமத்தில் மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் வீடுகளில் புகுந்த நீர், வடியாமல் சாலையில் வசிக்கும் நிலை உருவாகியுள்ளது.

  இன்னும் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் வடிவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரங்களில் குழந்தைகள், பெண்கள் பெரும் அச்சத்தில் வாழ்கின்றனர்.

  10 வருடங்களுக்கு முன்பு தர்மதானபுரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அரசு இலவசமாக அளித்த இடத்தில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பெரும் போராட்டத்தை சந்திக்கின்றனர்.

  இதையும் படிங்க : மயிலாடுதுறையில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கம் - மாணவர்கள், பொதுமக்கள் தவிப்பு!

  மழை வெள்ளத்தால் கால்நடைகளை வெளியே கொண்டு வரமுடியாமல் மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன. தற்போது பெய்த கனமழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  சரியான வடிகால்கள் இல்லாததாலும் வீடுகள் தாழ்வான பகுதிகளில் இருப்பதாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடிநீர் வசதி சரியாக இல்லாமல் குடிநீர் குழாயில் குறைந்த அளவில் தண்ணீர் வருகிறது. 100 குடும்பங்கள் இருக்கும் கிராமத்திற்கு ஒரு குடிநீர் குழாய் இருக்கும் அவலம்.

  தினக்கூலியான இவர்களுக்கு அந்த கிராமத்திற்கான வட்டாசியார், வருவாய் ஆய்வாளர் போன்ற அதிகாரிகள் உணவு, பிஸ்கெட், போர்வைகள் வழங்கி ஆறுதல் கூறியுள்ளனர். தற்போது 2 நாட்களாக இரவு நேரம் மட்டும் அங்குள்ள பள்ளியில் தங்கவைத்துள்ளனர்.

  இந்த வெள்ளம் வடியும் வரை தங்களுக்கு உணவும், பள்ளியில் தங்குவதற்கான அனுமதியும் தந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  இதையும் படிங்க : மயிலாடுதுறையில் சிறப்பாக நடைபெற்ற காவிரி துலாக்கட்டத்தின் கடைமுக தீர்த்தவாரி நிகழ்வு

  விவசாய நிலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்திருந்த சம்பா நெற்பயிர்கள் அழுகி வீணாகின. கடந்த திங்கட்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் சீர்காழியில் மழை பாதித்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

  மழையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு நடத்தி உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்காத நிலையில் நேற்று ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மக்களிடம் சமாதானம் பேசி பொதுமக்களை போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  அப்பகுதியில் சரியான வடிகால்கள் அமைத்து, வீடுகளை சுற்றி மண் கொட்டி சீர்செய்து, குடிநீர் வசதிகள் செய்து தரவேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களுக்கு சரியான நிவாரணம் கிடைக்க வேண்டும். அடுத்த ஆண்டு மழைகாலங்களில் மழை வெள்ளம் வராத அளவிற்கு அனைத்தையும் சரிசெய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கின்றனர்.

  செய்தியாளர் : கணபதி - மயிலாடுதுறை

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Mayiladuthurai