ஹோம் /மயிலாடுதுறை /

PM Kisan நிதி பெற மயிலாடுதுறை விவசாயிகள் இதை உடனே செய்யுங்கள் - 15ம் தேதி கடைசி நாள்...

PM Kisan நிதி பெற மயிலாடுதுறை விவசாயிகள் இதை உடனே செய்யுங்கள் - 15ம் தேதி கடைசி நாள்...

 PM Kisan நிதி

PM Kisan நிதி

Mayiladuthurai District | நாடு முழுவதும்  பாரத பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் (PM Kisan) விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் ரூ.2000 வீதம் 3 தவணையாக ரூ.6000 ஆண்டுக்கு செலுத்தப்படுகிறது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

PM Kisan நிதியை பெற விரும்பும் மயிலாடுதுறை விவசாயிகள் உடனடியாக வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என்று மயிலாடுதுறை கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும்பாரத பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் ரூ.2,000 வீதம் 3 தவணையாக ரூ.6,000 ஆண்டுக்கு செலுத்தப்படுகிறது.

13 ஆவது தவணையாக ரூ.2,000 பெறுவதற்கு பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்ட பி.எம். கிசான் திட்ட ஆதாா் எண்ணுடன் தொலைபேசி எண்ணை தவறாமல் இணைக்க வேண்டும். இதை கேஓய்சியாக செய்ய வேண்டும்.

இதில், யாரேனும் தொலைபேசி எண்ணை மாற்றம் செய்திருந்தால், தற்போது பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண்ணை ஆதாா் எண்ணுடன் இணைக்க அருகிலுள்ள அஞ்சல் நிலையத்தை அணுகி இணைத்துக் கொள்ளலாம்.

அதன் பின்னா் இ. கே.ஒய்.சி. செய்து கொள்ள 48 மணிநேரத்துக்குள் அருகில் உள்ள இ-சேவைமையத்தை அணுகி பி.எம். கிசான் வலைதளத்தில் தங்களது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து பின்னா் பெறப்படும் ஓ.டி.பி. எண்ணை பதிவேற்றம் செய்து தங்களது பி.எம். கிசான் திட்ட கணக்கு எண்ணுக்கு 13 ஆவது தவணை நிதி பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும், விவசாயிகள் தங்களது பட்டா , சிட்டா, ஆதாா் விவரங்களை கட்டாயமாக தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரிடம் கொடுத்துத் உழவா் அலுவலா் தொடா்பு திட்ட செயலி மூலம் நில ஆவணங்களைச் சரிபாா்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

Must Read : திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

இது குறித்து மயிலாடுதுறை கலெக்டர் லிலதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதிவு செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களுடைய ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி. மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுவரை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள் வரும் 15ஆம் தேதிக்குள் (செவ்வாய்க் கிழமை) அருகிலுள்ள இ-சேவை மையங்கள், இ-தபால் நிலையங்களை அணுகி தகுந்த விவரங்களை சமர்ப்பித்து பதிவு செய்து இத்திட்டத்தில் பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Farmers, Local News, Mayiladuthurai, PM Kisan