ஹோம் /மயிலாடுதுறை /

சோழர்களின் புகழ்மிக்க துறைமுகம்... பூம்புகாரில் சுற்றுலா பயணிகள் பார்க்கவேண்டிய முக்கிய இடங்கள்

சோழர்களின் புகழ்மிக்க துறைமுகம்... பூம்புகாரில் சுற்றுலா பயணிகள் பார்க்கவேண்டிய முக்கிய இடங்கள்

பூம்புகார்

பூம்புகார்

Mayiladuthurai district | மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இங்கிருக்கும் அழகிய கடல்கரை மற்றும் சுற்றுலா தலங்களை குடும்பத்துடுன் சென்று பாரத்து வியந்து ரசிக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் பல்வறு புகழ்களை பெற்று விளங்கம் இடமாகும். இது அழகிய கடல்கரை நகரம். அங்கிருக்கும் சுற்றுலா தலங்கள் இங்கு வருவேரை கவர்ந்திழுத்து, நீங்காத நினைவுகளை கொடுக்கும் வல்லமை கொண்டவை. இந்த பூம்புகார் மயிலாடுதுறையினல் இருந்து  22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் புகார் நகரம் என்று பூம்புகார் என்றும் குறிப்பிட்டு போற்றப்படும் இப்பகுதி, கவிரிப்பூம்பட்டிணம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். காவிரி ஆறு கடலில் புகும் இடம் என்பதால் காவிரிபூம்பட்டினம் என்று பெயர் பெற்றது.

பூம்புகார்

“பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்

வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு

ஓங்கிப் பரந்தொழுக லான்” - என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் நூலில் பூம்கார் நகரை பற்றி மங்கள வாழ்த்து பாடலில் புகழ்ந்துள்ளார்.

முற்கால சோழர்கள் காலத்தில் (சங்க காலத்தில்) பூம்கார் அவர்களின் தலைநகராகவும் இருந்துள்ளது. பின்னாளில் ஆழிப்பேரலையால், இந்த அழகிய பூம்புகார் நகரம் அழிவுக்கு உள்ளானது. அப்போது,  வராலாற்று சிறப்புவாய்ந்த துறை முகம் கடலில் புதையுண்டு போனது.

பூம்புகார்

தமிழர்களின் வாணிபச் சிறப்பை பறைசாற்றிய இந்த பூம்புகார் நகரானது ஓர் வரலாற்று சின்னமாகவே பார்க்கப்படுகிறது. இந்த இடத்தைக் காண இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த பூம்புகார் நகரின் சிறப்பை, சங்க இலக்கியங்களுன் ஒன்றான் பட்டினப்பாலை நூலில், கடல் வழியே வந்த குதிரைகள், மிளகு மூட்டைகள், வடமலையில் பிறந்த மணிக்கற்கள், மேற்கு மலையில் பிறந்த சந்தனம், அகில், தென்கடல் முத்து, கீழைக்கடல் பவளம், கங்கை காவிரி விளைச்சல்கள், ஈழத்து உணவு முதலான பண்டங்கள் தெருக்களில் மண்டிக்கிடந்ததாக கூறி பேற்றப்பட்டுள்ளது.

பூம்புகார்

தொன்மையான மண் சிற்பங்கள் மற்றும் தாழிகள் பூம்புகார் பகுதியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பழமையான நாகரிக நகரங்களில் ஒன்றாக இந்த பூம்புகார் நகரம் கருதப்படுகிறது.

சிலப்பதிகார கலைக் கூடம்:

பூம்புகாரில் 7 அடுக்கு கலை நயமிக்க கோபுரத்துடன் சிலப்பதிகார கலைக் கூடம் அமைப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்காக தமிழக அரசால் 1973ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில், நாயகன், நாயகியான கோவலன் மற்றும் கண்ணகி சிலைகளும், பூம்கார் நகர் குறித்தும் விஷயங்கள் நிறைந்துள்ளன. குடும்பத்துடன் சென்று இந்த

தரங்கம்பாடி டேனிஷ் கோடடை:

பூம்புகார் வருபவர்கள் அருகில் இருக்கும் தரங்கம்பாடிக்கும் ஒரு விசிட் அடிக்கலாம். இங்கே 1792ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்களால் கட்ட துவங்கி, பிறகு டேனிஷ் ஆட்சியாளர்களால் கட்டி முடிக்கப்பட்ட டேனிஷ் கோடடை பார்க்க வேண்டிய முக்கிய இடம்.

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை

சியோன் தேவாலயம்:

தேபோல,  1701-ல் தரங்கம்பாடியில் வசித்த டச்சுக்காரர்களால் சியோன் தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. இது ஆங்கிலேயர்களாலும் புனரமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமிக்க இந்த தேவாலயம். சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்படும் இடமாகும்.

மாசிலாமணி நாதர் கோயில் :

தரங்கம்பாடியில் மாசிலாமணி நாதர் கோயில் அமைந்துள்ளது. இது மாறவர்மன் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகும். தமிழர் கட்டடக் கலைக்கு பெருமை சேர்க்கும் கோவிலாக இது திகழ்கிறது. சுற்றுலா பயணிகள் பூம்புகாருக்குச் சென்று அப்படியே இந்த இடங்களையும் பார்த்து திரும்பலாம்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Mayiladuthurai, Tourist spots