மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுபான கடையில் மது பாட்டில்கள் இறக்கி கொண்டிருந்த லாரியில் 48 குவாட்டர் பாட்டில்கள் அடங்கிய ஒரு பாக்ஸ் மது பாட்டில்களை இளைஞர்கள் கண்ணிமைக்கும் நொடியில் இருசக்கர வாகனத்தில் திருடிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மதுபான மொத்த கிடங்கில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விற்பனைக்காக மதுபாட்டில்கள் லாரிகளில் வருவது வழக்கம்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மகாதானத் தெருவில் அரசுக்கு சொந்தமான 5646 எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடைக்கு நேற்று மாலை லாரியில் மது பாட்டில்கள் வந்து இறங்கியது. அதனை ஊழியர்கள் பாக்ஸ் பாக்ஸ் ஆக இறக்கி டாஸ்மாக் கடைக்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அதனை நோட்டமிட்டு கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் லாரியிலிருந்து எடுத்து வைக்கப்பட்ட 48 குவார்ட்டர் பாட்டில்கள் அடங்கிய (பிலாக் பேர்ல்) ஒரு பாக்ஸ் மது பாட்டில்களை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு கண்ணிமைக்கும் நொடியில் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
மேலும் படிக்க : எச்சரிக்கை..! கோடை சீசனுக்கு மாம்பழங்கள் வாங்கும்போது இந்த விஷயங்களை கவனிங்க..!
லாரியிலிருந்து ஊழியர் இறங்கி விரட்டி சென்றும் அந்த இளைஞர்களை பிடிக்க முடியவில்லை. திருடிச் சென்ற 48 மதுபாட்டில்கள் விலை (ஒரு பாட்டில் ரூ.130) ரூ.6,140 ஆகும்.
இது குறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சுரேந்திரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மயிலாடுதுறை போலீசார் சிசிடிவி பதிவை வைத்து இளைஞர்களை தேடி வருகின்றனர்.
இளைஞர்கள் மது பாட்டில்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மது கடைகளை மூட போராடும் இளைஞர்கள் மத்தியில் மது பாட்டில்களை இளைஞர்கள் திருடி செல்லும் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரங்கேறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - கிருஷ்ணகுமார் (மயிலாடுதுறை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mayiladuthurai, Tasmac