முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / தாட்கோ கடன் கொடுக்க மறுக்கும் வங்கி - கலெக்டர் காரை மறித்து பொதுமக்கள் தர்ணா

தாட்கோ கடன் கொடுக்க மறுக்கும் வங்கி - கலெக்டர் காரை மறித்து பொதுமக்கள் தர்ணா

போராட்டம்

போராட்டம்

வங்கியில் இருந்து தாட்கோ மானியத்துடன் கூடிய கடன்கொடுக்காமல் அலைகழித்து வருவதாக புகார்.

  • Last Updated :
  • Sirkali (Sirkazhi), India

தாட்கோ கடன் கொடுக்க வங்கி மறுப்பதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் தாட்கோவில் தாழ்த்தப்பட்டவருக்காக அரசால் ஒதுக்கப்பட்ட மானியத்துடன் கூடிய தொழில் கடனுக்கு மனு கொடுத்துள்ளனர். அவர்களது மனுக்களை விசாரித்து தாட்கோ அதிகாரிகள் கடந்த 31.5.2019ம் ஆண்டு ஒருங்கிணைந்த நாகை மாவட்டமாக இருந்தபோதே சீர்காழி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த வங்கியில் இருந்து தாட்கோ மானியத்துடன் கூடிய கடன்கொடுக்காமல் அலைகழித்து வந்துள்ளனர்.

மயிலாடுதுறை தனிமாவட்டமாக உருவாகிய பிறகு தொடர்ந்து பலமுறை மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுஅளித்தும் இதுநாள்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 4 வருடங்களாக தொடர்ந்து கடன்பெற அலைகழிக்கப்பட்டதால் பாதிபேர் அதற்கான முயற்சியை கைவிட்டனர்.

இந்நிலையில் இன்று மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் தாட்கோ கடன் கொடுக்க வங்கி நிர்வாகம் மறுப்பதாகவும், 4 வருடங்களாக கடன்பெற முடியாமல் அலைகழிக்கப்படுவதை விளம்பர பலகையில் எழுதிக்கொண்டு சிலர் குறைத்தீர் கூட்டத்தில் மனுகொடுக்க வந்தனர்.

குறைதீர் கூட்டத்தில் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  பணி நிமித்தமாக கூட்டத்திலிருந்து அவசரமாக வெளியே புறப்பட்டார். மாவட்ட ஆட்சியர் காரில் ஏறி புறப்பட்டபோது   தாட்கோ கடன் வழங்கக்கோரி காரை வழிமறித்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். உடனே அவர்களை மாவட்ட ஆட்சியர் அழைத்துபேசி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பபடும் என்று கூறியதை அடுத்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் : கிருஷ்ணகுமார் ( மயிலாடுதுறை)

First published:

Tags: Mayiladuthurai, Tamil News