மயிலாடுதுறையின் காவேரி பட்டின அகழாய்வில் அரியவகை மணிகள், பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.
காவேரிப்பட்டினம் அகழாய்வில் 350க்கும் அதிகமான பலவகைப்பட்ட மணிகள் கிடைத்துள்ளன. இம்மணிகள் இரத்தினம், சிவப்புநிற மணி, பவழம், பழுப்பு நிற மணி, சுடுமண், கல் மற்றும் செம்பு போன்றவற்றால் ஆனவையாகும். இங்கு கிடைத்த மணிகளில் பெரும்பாலானவை கண்ணாடியால் உருவாக்கப்பட்டவையாகும்.
மேலும் இந்த பொருட்கள் பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் காணப்படுகின்றது. மேற்கூறப்பட்ட மணிவகைகளைக் கொண்டு இப்பகுதி அக்காலத்தில் கண்ணாடியில் மணிகள் தயாரிக்கும் ஓர் சிறந்த தொழிற்கூடமாக விளங்கியிருக்கக் கூடும் என்பதினை உணரமுடிகிறது.
பூம்புகார் என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஒரு காலத்தில் காவேரி பூம்பட்டினம் மற்றும் காவேரிப்பட்டணம் (நவீன காவேரிப்பட்டினத்துடன் குழப்பமடையக்கூடாது ) என்று அழைக்கப்படும் ஒரு செழிப்பான பண்டைய துறைமுக நகரமாக இருந்தது. இது ஒரு காலத்தில் தமிழகத்தின் ஆரம்பகால சோழ மன்னர்களின் தலைநகராக செயல்பட்டது.
பூம்புகார் காவேரியின் இறுதிப் புள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது. நதி, கடல் கரையோரம். இது எரித்ரியன் கடலின் பெரிப்ளஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவாவின் தேசிய கடல் தொல்லியல் கழகத்தால் நடத்தப்பட்ட கடல் தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம், நகரத்தின் பெரும்பகுதி கடல் அரிப்பு மற்றும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது என்று நிறுவப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய கப்பல்கள் மற்றும் பல மீட்டர் நீளமுள்ள தூண் சுவர்கள் சமீபத்தில் தோண்டியெடுக்கப்பட்ட பூம்புகார் இலக்கியக் குறிப்புகளை உறுதிப்படுத்துகின்றன. அதன் பிறகு பலமுறை புனரமைக்கப்பட்டது. கிமு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால மண்பாண்டங்கள் இந்த நகரத்திற்கு கிழக்கே கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மணிமேகலையில் குறிப்பிடுகையில் இக்காவேரிபூம்பட்டினம், இளங்கிள்ளி என்னும் சோழ மன்னரின் காலத்தில் கடலில் மூழ்கியது என்று கூறுகிறது. கற்பனைக் கலந்து கூறப்படும் இக்காப்பியத்தின் கருத்தினை முற்றிலும் ஏற்றுக்கொள்ளாவிடினும் இந்நகரின் ஒரு பகுதி மட்டும் கடலின் சீற்றத்தால் மூழ்கி இருக்கக்கூடும் என்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நகரம் முழுவதுமாக கடல் சீற்றத்தால் மூழ்கிவிடவில்லை. கி.பி. 5ம் நூற்றாண்டுகளில் புத்ததத்தர் எனும் புத்த துறவி இங்குள்ள விகாரையில் தங்கி 'அபிதம்ம அவதாரம்' எனும் நூலை எழுதியுள்ளார். அந்நூலில் இந்நகரின் முக்கிய கடைத்தெருக்கள் பற்றியும், நகரினைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் பௌத்த ஜாதகக் கதைகள், அகித்தி குறிப்பிடுகின்றது. கி.பி.7ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தேவாரப் பாடல்களில் காவேரிப்பட்டினம் பல்லவனேஸ்வரம் மற்றும் புகார்-சாயக்காடு என்று இரு இடங்களைக் குறிப்பிடுகின்றது.
காவேரிப்பூம்பட்டின அகழாய்வில் மட்டுமே தமிழக மக்களின் வரலாறு கி.மு 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 12ம் நூற்றாண்டு வரையில் தொடர்ச்சியாகக் கிடைக்கின்றது. இவ்வாறு கிடைப்பதின் காரணம் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளவை போன்றே அகழாய்விலும் கிடைத்துள்ளமையே ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mayiladuthurai