ஹோம் /மயிலாடுதுறை /

சீர்காழியில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை - குளங்கள் நிரம்பி சாலையில் செல்லும் நீர்

சீர்காழியில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை - குளங்கள் நிரம்பி சாலையில் செல்லும் நீர்

மயிலாடுதுறையில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி அதில் குப்பைகள் கொட்டப்படுகிறது.

மயிலாடுதுறையில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி அதில் குப்பைகள் கொட்டப்படுகிறது.

Mayiladuthurai News : மயிலாடுதுறையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் குளங்கள் நிரம்பி காட்சியளிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

    வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர் போன்ற பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு கனமழை பெய்தது. அதன் காரணமாக 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 43 செ.மீ மழை பெய்தது.

    மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி குளத்தில் உள்ள தண்ணீர் சாலைக்கு வரத்தொடங்கியது. முக்கியமாக அரசு மருத்துவமனை அமைந்துள்ள சீர்காழிக்கு செல்லும் சாலை, நீதிமன்றம் அமைந்துள்ள காமராஜர் சாலைகளில் இருக்கும் குளங்கள் நிரம்பி வருகிறது.

    இதில் அரசு மருத்துவமனை சாலையில் இருக்கும் குளத்தில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுகிறார்கள். இதனால் குளத்தின் தண்ணீருடன் குப்பைகளும் கலந்து சாலைக்கு வருகிறது. இதனால் பல தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    Also Read: கொட்டித் தீர்த்த கனமழை.. நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை

    குளங்கள் சரியாக தூர்வாரப்படாமல் குளத்தில் ஆகாய தாமரை அதிகளவில் உள்ளது. இதில் மக்களும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி உடனடியாக இதுபோன்ற மழை காலங்களில் முன்னதாகவே குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரியாக பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    Published by:Ramprasath H
    First published:

    Tags: Heavy rain, Local News, Mayiladuthurai