முகப்பு /மயிலாடுதுறை /

அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!

அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!

X
பாதிரி

பாதிரி மாம்பழம்

Pathiri Mango famous in Mayiladuthurai : மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாட்டியில் ஃபேமஸான பாதிரி மாம்பழம் பற்றிய செய்திகுறிப்பு.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறையில் பேமஸாகும் பாதிரி மாம்பழம் பற்றி இதில் பார்க்கலாம்.

மாம்பழத்தில் கிளிமூக்கு மாம்பழம், பங்கனப்பள்ளி, மல்கோவா மாம்பழம் என மாம்பழம் வகைகளை வகைப்படுத்தி கொண்டே செல்லலாம். ஆனால் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும் மயிலாடுதுறை பாதிரி மாம்பழம். இந்த மாம்பழம் சுவையிலும், பெயரிலும் தனித்து உள்ளது. இதற்கு பாதிரி மாம்பழம் என பெயர் வர காரணம் என்ன என்பது குறித்து அறிந்து கொள்வோம்.

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாட்டிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள பரிசுத்த இம்மானுவேல் ஆலயத்தில் முதன்முதலில் பாதிரி மாம்பழம் ஒரு பாதிரியாரால் உருவாக்கபட்டது என்று அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. 1847ம் ஆண்டு மிஸ்னரியாக வந்த போக்ஸ் ஐயர் என்பவர் மயிலாடுதுறை கூறைநாடு பசுபதி தெரு அருகில் உள்ள பரிசுத்த இம்மானுவேல் ஆலயத்தை நிறுவி வந்தார்.

பாதிரி மாம்பழம்

ஒரு நாள் போக்ஸ் ஐயர் ஒரு ஆற்றில் மாங்கொட்டை ஒன்று மிதந்து வருவதை பார்த்து அதை எடுத்து அதை நட்டு வைத்துள்ளார். பிறகு கொஞ்சம் நாள் கழித்து அது மாம்பழம் மரமாக மாறி கனி காய்க்க துவங்கியது. இந்த மாம்பழம் வெளியில் பார்க்க பச்சை நிறமாகவும் உள்ளே பார்க்க சிவப்பு நிறமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதை தோலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றும் மற்ற மாம்பழங்கள் காட்டிலும் இதற்கு சுவை அதிகம் என கூறுகின்றனர் இங்குள்ள மக்கள். பாதிரியார் நட்டு வைத்த மாம்பழம் என்பதால் பாதிரி மாம்பழம் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் இருந்து அனைத்து இடங்களுக்கும் இந்த வகை மாம்பழம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த இடத்தை பாதிரி மாம்பழம் தோட்டம் என்றும் இந்த மாம்பழம் இங்குதான் முதன்முதலில் நடப்பட்டது என்பதால் பரிசுத்த இம்மானுவேல் ஆலயத்தை பாதிரி மாம்பழத்தின் பிறப்பிடம் என்று கூறுகிறார்கள்.

First published:

Tags: Local News, Mayiladuthurai