முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / காதலித்து கர்ப்பமாக்கிய கொத்தனார்... கடிதம் எழுதி வைத்துவிட்டு நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு..!

காதலித்து கர்ப்பமாக்கிய கொத்தனார்... கடிதம் எழுதி வைத்துவிட்டு நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு..!

மாதிரி படம்

மாதிரி படம்

Crime News : மயிலாடுதுறையில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கி அவரது தற்கொலைக்கு காரணமான காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாவதி(20). இவர் சீர்காழி பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், பிரபாவதி ஞாயிறு அன்று காலையில் தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள வேப்பமரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார் பிரபாவதி உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பிரபாவதியின் தந்தை முருகவேல் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த பிரபாவதி ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அந்த கடிதத்தில், “நான் வசிக்கும் பகுதியில் உள்ள கொத்தனார் வேலை செய்து வரும் ஆனந்தராஜ் (26) என்பவரை நான் காதலித்து வந்தேன்.

இதனால் ஆனந்தராஜ் என்னிடம் நெருக்கமாக பழகி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் 3 மாத கர்ப்பம் அடைந்தேன். மேலும் ஆனந்தராஜிடம் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தேன். ஆனால் அவர் திருமணத்துக்கு மறுத்தார். மேலும் ஆனந்தராஜ் மற்றும் அவரது சகோதரர் அலெக்சாண்டர், அண்ணி ரஞ்சனி ஆகியோர் ஆனந்தராஜை திருமணம் செய்து வைக்க முடியாது என்றும், நீ செத்து விடு என என்னிடம் கூறினர். இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்” என அந்த கடிதத்தில் பிரபாவதி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஜூமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் அரசே நடத்த வேண்டும்: சீமான் கோரிக்கை

இந்நிலையில், இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக அலெக்சாண்டர், ஆனந்தராஜ், ரஞ்சினி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

top videos
    First published:

    Tags: Crime News, Local News, Mayiladuthurai