ஹோம் /மயிலாடுதுறை /

நாடி ஜோதிடத்திற்கு வைத்தீஸ்வரன் கோயில் பிரபலமானது எப்படி?

நாடி ஜோதிடத்திற்கு வைத்தீஸ்வரன் கோயில் பிரபலமானது எப்படி?

வைத்தீஸ்வரன் கோயில்

வைத்தீஸ்வரன் கோயில்

Mayiladuthurai District News : வைத்தீஸ்வரன் அருகில் இருக்கும் குமார் நத்தம் என்ற கிராமத்தில் வல்லுநர் என்ற சமுகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அருகில் இருக்கும் கிராமங்களில் ஜோதிடம் பார்த்து வந்தனர்.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் பிரபலமாக இருக்கும் நாடி ஜோதிடம் குறித்து இந்த பதிவில் காணலாம்.

  நாடி ஜோதிடத்தைப் பற்றி விளக்கிய நாடி ஜோதிடர் ஞான சிகாமணி , ‘மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் 1,800 வருடங்கள் பழமையான கோயிலாகும். நாடி ஜோதிடம் என்பது 1,800 வருடங்களுக்கு முன்பு இருந்து கிடையாது. அதனால் நாடி ஜோதிடத்திற்கும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்றார்.

  மேலும் மதுரையில் ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நாடி ஜோதிடத்தை பயின்று வந்தனர். ஆனால், அங்கு அது பெரிதாக பேசப்படவில்லை என கூறப்படுகிறது.

  வைத்தீஸ்வரன் கோயில்

  நாடி ஜோதிடம் எப்படி பிரபலமானது?

  வைத்தீஸ்வரன் கோயிலில் நாடி ஜோதிடம் பிரபல அடைய காரணம் முன் காலத்தில் நாடி ஜோதிடம் என்பது ஓலைச்சுவடிகளில் பார்க்கப்பட்டது. அதற்காக நிறைய ஓலைச்சுவடிகளை ஒரே இடத்தில் சரபோஜி என்ற மகாராஜா தஞ்சாவூரில் பாதுகாத்து வந்தார்.

  அந்த சுவடுகளில் இருக்கும் எழுத்துக்களையும், புள்ளியில்லா எழுத்துக்களையும் பிழையில்லாமல் படித்து மக்களுக்கு சொல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது வைத்தீஸ்வரன் அருகில் இருக்கும் குமார் நத்தம் என்ற கிராமத்தில் வல்லுநர் என்ற சமுகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர்.

  இவர்கள் அருகில் இருக்கும் கிராமங்களில் ஜோதிடம் பார்த்து வந்தனர். இவர்கள் வைத்தீஸ்வரன் கோயிலின் ஒரு பிரதான குடும்பமாக ஜோதிடம் பார்த்து வந்தனர். அப்போதுதான் ஓலைச்சுவடிகளில் இருக்கும் எழுத்துக்களையும், புள்ளியில்லா எழுத்துகளையும் படிப்பதில் வல்லுனர் சமூகத்தை சேர்ந்த மக்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

  வைத்தீஸ்வரன் கோயில்

  அதனால் ஜோதிடம் பார்ப்பதற்கு அந்த வல்லுநர் சமூக மக்களிடமே அந்த ஓலைச்சுவடிகள் ஒப்படைக்கப்பட்டது. அந்த சமூக மக்கள் வைத்தீஸ்வரன் கோயிலில் ஐந்து தலைமுறைக்கும் மேல் நாடி ஜோதிடம் பார்த்து வருகின்றனர்.

  வைத்தீஸ்வரன் கோயிலில் ஜோதிடம் பார்க்க வரும் மக்களுக்கு ஜோதிடர்கள் சொன்ன விஷயங்கள் நடந்ததால் அவர்கள் மற்றவர்களிடம் சொல்லும் போது அது உலகம் முழுவதும் பிரபலமானது. இப்படி தான் நாடி ஜோதிடம் அனைத்திடங்களிலும் பேசப்படுகிறது.

  மயிலாடுதுறை செய்தியாளர் - கணபதி

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Mayiladuthurai