ஹோம் /மயிலாடுதுறை /

நெற்பயிர்களை தாக்கும் ஆணைக்கொம்பனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்-விவசாயிகளே இதை செய்யுங்க.

நெற்பயிர்களை தாக்கும் ஆணைக்கொம்பனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்-விவசாயிகளே இதை செய்யுங்க.

ஆணைக்கொம்பன் பூச்சி

ஆணைக்கொம்பன் பூச்சி

பருவ மழை பெய்துள்ளதால்,  நெற்பயிர்களை ஆணைக்கொம்பன் பூச்சி தாக்கி வருகிறது.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  பருவ மழை பெய்துள்ளதால், நெற்பயிர்களை ஆணைக்கொம்பன் பூச்சி தாக்கி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் அறிவுரைகளை தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக வேளாண் இணை இயக்குனர் சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, "மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி 67 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற் பயிர்கள் வளர்ச்சி பெற்றும் தண்டு உருளும் நிலையில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், நெற்பயிர்களை ஆணைக்கொம்பன் பூச்சி தாக்கி வருகிறது.

  இந்த வகை பூச்சி தாக்குதல்களால், வயல் வெளிகளில் நெற்பயிர்கள் தண்டு குழாய் போல் மாறி வெளிர் பச்சை நிறத்தில் பார்ப்பதற்கு வெங்காய இலை போன்று தோற்றமளிக்கும். இந்நோய் தாக்குதல் காரணமாக நெற்பயிர் குருத்துக்களில் நெற்கதிர் உருவாகாமல் தடுக்கப்படுகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்பூச்சியின் தாக்கம் நெல் தண்டு உருளும் பருவத்திற்கு முன் உள்ள பயிரில் அதிகமாக காணப்படுகிறது.

  பொதுவாக நெல் சாகுபடிக்கு முன்பு கோடை உழவு செய்தல் நல்லது. பொட்டாஷ் உரம் மேலும், பொட்டாஷ் உரத்தினை பரிந்துரைக்கப்பட்ட அளவினை பயன்படுத்த வேண்டும். வயல்களில் ஒளிப்பொறி வைத்து தாய் பூச்சிகளை கண்காணிக்கலாம்.

  Also Read: மயிலாடுதுறையில் களைக்கட்டும் கார்த்திகை மாத முழுக்கு கடைகள்- குவியும் பொதுமக்கள்

  பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளான பிப்ரோனில் 0.3 சதவீதம் ஏக்கருக்கு 7 கிலோ அல்லது தயோமீத்தாக்சம் 25 சதவீதம் ஏக்கருக்கு 40 கிராம் அல்லது கார்போ சல்பான் 25 சதவீதம் ஏக்கருக்கு 400 மி.லி. என்ற அளவில் தெளித்து ஆணைக்கொம்பன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Agriculture, Farmers, Local News, Mayiladuthurai