ஹோம் /மயிலாடுதுறை /

மயிலாடுதுறையில் பல இடங்களில் வழிந்தோடும் சாக்கடை நீர் - பொதுமக்கள் கடும் அவதி

மயிலாடுதுறையில் பல இடங்களில் வழிந்தோடும் சாக்கடை நீர் - பொதுமக்கள் கடும் அவதி

சாக்கடை ஓடும் சாலை

சாக்கடை ஓடும் சாலை

Mayiladuthurai | மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய இடங்களில் சாக்கடை நீர் வழிந்து மழை தண்ணீருடன் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

    மயிலாடுதுறை ஜங்சன் செல்லும் சாலை, வ.உ.சி தெரு சாலை, அரசு மருத்துவமனை சாலை போன்ற இடங்களில் பாதாளச்சாக்கடை வழிந்து சாலையில் மழை தண்ணீருடன் கலக்கிறது. வ.உ.சி தெரு மக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் வேறு வழியாக 2 கி.மீ சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

    சாக்கடை தேங்குவதால் துர்நாற்றம் ஏற்பட்டு சிலர், அவர்கள் வசிக்கும் வீட்டையே காலி செய்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    சாக்கடை நீருடன் சாலைகள்

    இதனால் அப்பகுதியில் மாலை நேரங்களில் கொசு அதிகளவில் காணப்படுகிறது. இதனால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்று மக்கள் அச்சப்படுகிறார்கள். மழை காலங்களில் கழிவு நீரால் பெரிய அளவில் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    சாக்கடை நீருடன் சாலைகள்

    அப்பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கான குப்பை தொட்டி இல்லாததால் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் செல்லும் மக்கள் மூக்கை மூடியப்படியே செல்கிறார்கள்.

    சாலையில் வழந்தோடும் சாக்கடை நீர்

    இதனால் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். முக்கிய சாலைகளில் இது போன்ற செயல்களால் பெரும் விபத்து ஏற்படுகிறது.

    மயிலாடுதுறையில் நிறைய இடங்களில் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    செய்தியாளர்: கணபதி, மயிலாடுதுறை.

    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Mayiladuthurai