ஹோம் /மயிலாடுதுறை /

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப்பீடு தரவில்லை- சீர்காழியில் பொதுமக்கள் சாலை மறியல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப்பீடு தரவில்லை- சீர்காழியில் பொதுமக்கள் சாலை மறியல்

சாலை மறியலில் மக்கள்

சாலை மறியலில் மக்கள்

Mayiladuthurai | மயிலாடுதுறை மாவட்டம் ஆத்துக்குடி கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Sirkali (Sirkazhi), India

  மயிலாடுதுறை மாவட்டம் ஆத்துக்குடி கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மயிலாடுதுறையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் வீட்டிற்குள் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது மட்டுமல்லாமல் ஏரி, குளங்கள் நிரம்பின. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அதனால், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்தனர். இதில் ஆத்துக்குடி கிராமமும் ஒன்று. இந்த கிராமங்களில் சுமார் 100 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர்.

  சாலை மறியலில் மக்கள் 

  முன்னதாக மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ‘மயிலாடுதுறையில் மட்டும் ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளது.

  சாலை மறியலில் மக்கள்

  எனவே, மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். உரிய இழப்பீடு உடனே வழங்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.

  சாலை மறியலில் மக்கள்

  இந்தநிலையில், இருதினங்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், சீர்காழியில் மழை பாதித்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு நடத்தி உரிய இழப்பீடு வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

  இந்தநிலையில், ஆத்துக்குடி கிராமத்திற்கு இன்று வரை நிவாரணம் வழங்காததால் ஆத்திரம் அடைந்த ஊர்பொதுமக்கள் நேற்று காலை 10 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை சீர்காழி செல்லும் பிரதான சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பானது.

  பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மக்களிடம் சமாதானம் பேசி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றதும் போக்குவரத்து சீரானது.

  செய்தியாளர்: கணபதி, மயிலாடுதுறை.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Mayiladuthurai