ஹோம் /மயிலாடுதுறை /

குண்டு குழியுமாக முக்கியச் சாலைகள், தேங்கி நிற்கும் சாக்கடை நீர்- சீர்செய்ய மயிலாடுதுறை நகராட்சிக்கு மக்கள் கோரிக்கை

குண்டு குழியுமாக முக்கியச் சாலைகள், தேங்கி நிற்கும் சாக்கடை நீர்- சீர்செய்ய மயிலாடுதுறை நகராட்சிக்கு மக்கள் கோரிக்கை

பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்த கால்வாய்கள்

பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்த கால்வாய்கள்

Mayiladuthurai | மயிலாடுதுறை மக்களின் நலன் கருதி மயிலாடுதுறை நகராட்சி மழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் 28.12.2020 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 38-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மாவட்டத்தை மேம்படுத்த சிறிய சிறிய வேலைகள் நடைபெற்றன. தற்போது மழை காலம் வந்துவிட்டது.

  ஆனால், மயிலாடுதுறையின் முக்கிய சாலைகளான காமராஜர் சாலை, கண்ணாரத்தெரு சாலை, பூக்கடை தெரு சாலை, தரங்கை சாலை, பழைய பேருந்து நிலையம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டும் குழியுமான சாலைகள் சரி செய்யப்படாமல் இருக்கின்றன.

  இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பெரிய பாதிப்பை சந்திக்கிறார்கள். அதுமட்டுமின்றி விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது.

  குண்டும் குழியுமான சாலைகள்

  சுகாதாரச் சீர்கேடு

  முக்கிய கால்வாய்களில் குப்பைகள் அதிகம் காணப்படுகிறது. கால்வாய்கள் தூர்வாரப்படாமல் சாக்கடை நீர் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகளவில் இருக்கிறது. இதனால் பல நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என மக்கள் பெரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

  குண்டும் குழியுமான சாலைகள்

  குப்பைக் கிடங்காகும் பொது சாலைகள்

  சில இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதற்கு குப்பைத்தொட்டிகள் வைக்கப்படுவதில்லை. இதனால் மக்கள் சாலையோரங்களிலும், கால்வாய்களிலும் கொட்டுகிறார்கள். அதில் பெரிதளவில் பிளாஸ்டிக் பைகள் உள்ளன. சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை தெருநாய்கள் சாலையின் குறுக்கே சிதறி வைக்கிறது.

  இதனால் சாலைகள் பாதிப்படைகிறது. சிதறும் பிளாஸ்டிக் பைகள் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. அதனால் மயிலாடுதுறை மக்களின் நலன் கருதி மயிலாடுதுறை நகராட்சி மழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  செய்தியாளர்: கணபதி, மயிலாடுதுறை.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Mayiladuthurai