ஹோம் /மயிலாடுதுறை /

மயிலாடுதுறையில் களைக்கட்டும் கார்த்திகை மாத முழுக்கு கடைகள்- குவியும் பொதுமக்கள்

மயிலாடுதுறையில் களைக்கட்டும் கார்த்திகை மாத முழுக்கு கடைகள்- குவியும் பொதுமக்கள்

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை தொடர்ந்து முழுக்கு கடைகள் தொடங்கியது.

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை தொடர்ந்து முழுக்கு கடைகள் தொடங்கியது.

ஒவ்வொரு ஊர்களில் உள்ள வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வார்கள். இக்கடைகள் கார்த்திகை மாதம் முழுவதும் இருக்கும்.

 • Local18
 • 2 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவத்தை முன்னிட்டு சிவாலயங்களில் திருக்கொடியேற்றத்துடன் விழா தொடங்கும்.

  கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடிப் பாவங்களைப் போக்கிக்கொள்வதாக மக்கள் நம்புகின்றனர். இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர், வதாரண்யேஸ்வரர் ஆலயங்களில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

  மேலும், பத்துநாள் உற்சவமாக மயிலாடுதுறையிலுள்ள சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் தொடங்கிய பத்துநாள் உற்சவத்தில், 13-ம் தேதி திருக்கல்யாணமும், 15-ம் தேதி திருத்தேர் வீதியுலாவும் நடைபெற்று 16-ம் தேதி மயிலாடுதுறை நகருக்குப் பெருமை சேர்க்கும் கடைமுக தீர்த்தவாரியும் சிறப்பாக நடந்து முடிந்தது.

  விறுவிறுப்பாக நடக்கும் முழுக்கு கடைகள்:

  ஐப்பசி மாதம் துலாகட்ட உற்சவத்தின் முக்கியமான நிகழ்வுகள் கொடியேற்றத்துடன் தொடங்கி தற்போது முழுக்கு கடைகள் தொடங்கியுள்ளது. மயிலாடுதுறையில் துலாகட்ட உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி பின்னர் 10 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடந்து கடந்த 16 ம் தேதி துலாகட்ட கடைமுக தீர்த்தவாரி விழா சிறப்பாக நடைபெற்றது.

  Also Read:  தென்காசியில் மலை மீது ஒரு சொர்க்கம்.. திருமலை முருகன் கோயிலுக்கு போயிருக்கீங்களா..? 

  இதன் மற்றொரு விழாவான முழுக்கு கடைகள் சிறப்பு வாய்ந்தது. இதற்காக மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகில் தனி ஒரு இடம் ஒதுக்கப்பட்டு அங்கு ஒவ்வொரு ஊர்களில் உள்ள வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வார்கள். இக்கடைகள் கார்த்திகை மாதம் முழுவதும் இருக்கும். இந்த கடைகளுக்கு மயிலாடுதுறை மக்களும், மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் தினமும் வருவார்கள்.

  இந்த கடைகளில் வீட்டிற்கு தேவையான பொருட்கள், குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள், பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் கடைகள் இருக்கும். அனைவருக்கும் தேவையான காலணி கடைகள், துணி கடைகள், பள்ளி, கல்லூரி, டிராவல் பேக்ஸ் கடைகள் இருக்கும். இங்கு உள்ள கடைகளில் பொருட்களின் விலை முன்ன பின்ன இருந்தாலும் மக்கள் இங்கு வந்து பொருட்கள் வாங்க மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கிற்கு அனைவரும் இங்கு வருவார்கள். பேருந்து நிலையம் அருகில் இருப்பதால் வெளியூர் செல்லும் மக்கள் அதிகளவில் வருவார்கள். மாலை பள்ளி கல்லூரி முடிந்து மாணவ மாணவிகள் நண்பர்களுடன் வந்து சுற்றி பார்த்து பொருட்கள் வாங்குவார்கள்.

  செய்தியாளர்: கணபதி (மயிலாடுதுறை)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Local News, Mayiladuthurai, Shopping, Tamil News