முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / சொத்து பிரச்னையில் ஊரை விட்டு ஒதுக்கி விடுவோம் என மிரட்டல்.. கண்ணில் கருப்பு துணி கட்டி போராடிய குடும்பம்

சொத்து பிரச்னையில் ஊரை விட்டு ஒதுக்கி விடுவோம் என மிரட்டல்.. கண்ணில் கருப்பு துணி கட்டி போராடிய குடும்பம்

கண்ணை கட்டி போராட்டம் நடத்திய குடும்பத்தினர்

கண்ணை கட்டி போராட்டம் நடத்திய குடும்பத்தினர்

Mayiladuthurai News | ஜமாத்தில் தங்களை குறித்து அவதூறு கூறியதால் திருமங்கலம் பள்ளிவாசலுக்கு செலுத்த வேண்டிய பணத்தை வாங்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை அருகே குடும்ப சொத்து பிரச்னையில் ஊர் முக்கியஸ்தர்கள் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பதாக பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருடன் கண்ணில் கருப்பு துணி கட்டி கொண்டு ஆர்டிஓவிடம் புகார் மனு அளித்தார்.

மயிலாடுதுறை அருகே திருமங்கலம் மெயின்ரோடு அருகே உள்ள சாலையில் முகம்மதுநாசர் என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனது பெயரில் உள்ள வீட்டை தனது குழந்தைகளின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில் அவரது தங்கை ஹனிஸ்பாத்திமா வீட்டை தனக்கு கொடுக்குமாறு பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சிலருடன் மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ஜமாத்தில் தங்களை குறித்து அவதூறு கூறியதால் திருமங்கலம் பள்ளிவாசலுக்கு செலுத்த வேண்டிய பணத்தை வாங்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடாக தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

மேலும், சொத்துபிரச்னைக்கு ஊர்முக்கியஸ்தர்கள் சொல்வதுபடி செய்தால்தான் பள்ளிவாசலுக்கு வரிவாங்கிகொள்வோம் இல்லை என்றால் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிடுவோம் என்று மிரட்டுவதாக புகார் தெரிவித்து, குடும்பத்தினருடன் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்டிஓவிடம் புகார் மனு அளித்தார்.

செய்தியாளர் : கிருஷ்ணகுமார்

First published:

Tags: Local News, Mayiladuthurai