முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / சுகாதாரமற்ற முறையில் தயாரான குல்பி... நகராட்சி அதிகாரிகள் ஒரு டன் ஐஸ்கிரீமை அழித்து நடவடிக்கை

சுகாதாரமற்ற முறையில் தயாரான குல்பி... நகராட்சி அதிகாரிகள் ஒரு டன் ஐஸ்கிரீமை அழித்து நடவடிக்கை

அழிக்கப்பட்ட ஒரு டன் குல்பி ஐஸ்கிரீம்

அழிக்கப்பட்ட ஒரு டன் குல்பி ஐஸ்கிரீம்

Mayiladuthurai News | உரிய அனுமதி பெறாமல் மேற்கொண்டு குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை

  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு டன் குல்பி ஐஸ்கிரீமை நகராட்சி துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ரிஜிவான் அலி மற்றும் பதுருல் ஹசன் ஆகியோர் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டு பனந்தோப்பு தெருவில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக வீட்டிலேயே குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நகராட்சி துறையினர் நகராட்சி சுகாதார அலுவலர் லட்சுமிநாராயணன் தலைமையில், திடீரென ஐஸ்கிரீம் தயாரித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குல்பி ஐஸ்கிரீம் தயாரிக்க உரிய அனுமதி பெறாமல்,  சுகாதாரமற்ற முறையில் குல்பி ஐஸ் கிரீம் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையும் படிங்க: தங்கை மீது காதல்.. மறுத்த தந்தை.. நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்

உடனடியாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குல்பி ஐஸ்கிரீம், ஐஸ் கட்டிகள் மற்றும் குல்பி ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படும் பொருட்களை நகராட்சி துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் உரிய அனுமதி பெறாமல் மேற்கொண்டு குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் குல்பி ஐஸ்கிரீம் பொருள்களை நகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் சென்று அழித்தனர்.

top videos

    செய்தியாளர்: கிருஷ்ணகுமார்

    First published:

    Tags: Local News, Mayiladuthurai